மகனுடன் இணைகிறாரா மருமகள் ? – முதல் முறையாக மனம் திறந்த தனுஷின் தந்தை. வீடியோ இதோ.

0
431
dhanush
- Advertisement -

தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ போகிறார்கள் என்ற பரவிய செய்திக்கு தனுஷ் தந்தை அளித்து இருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. தனுஷ்- ஐஸ்வர்யாவின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-
Dhanush

மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவருமே தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

தனுஷ் நடித்த படங்கள்:

சமீபத்தில் தனுஷ் நடித்த தி கிரேட் மேன் என்ற படம் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

dhanush

தனுஷ் நடிக்கும் படங்கள்:

அதேபோல் தனுஷின் நானே வருவேன் படமும் சில வாரங்களுக்கு முன் தான் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir ஆகிய பல படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார். பிறகு ஐஸ்வர்யா படம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ போகிறார்கள் என்ற செய்தி சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

கஸ்தூரி ராஜா அளித்த பேட்டி:

இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் சேர்வது குறித்து தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் கஸ்தூரி ராஜா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரிடம் தனுஷ்- ஐஸ்வர்யா இணைவது குறித்து செய்திகள் தொலைக்காட்சியில் வந்து கொண்டிருக்கின்றது. இது குறித்து உங்களுடைய கருத்து என்று கேட்டார்கள். உடனே கஸ்தூரிராஜா கூறியிருந்தது, நான் இங்கே இருக்கிறேன். தொலைக்காட்சியை எங்கே பார்த்தேன்? எதுவாக இருந்தாலும் சந்தோஷம் தான்.

வீடியோவில் 24 நிமிடத்தில் பார்க்கவும் :

தனுஷ்-ஐஸ்வர்யா குறித்து சொன்னது:

பிள்ளைகளுடைய மகிழ்ச்சிக்கு இடையூறு என்றால் எங்களுக்கும் இடையூறு தான். பிள்ளைகள் சந்தோஷமாக இருந்தால் எங்களுக்கும் சந்தோசம் தான். பிள்ளைகளுடைய பணக்காசு எதுவும் தேவையில்லை. பணம் காசு இல்லாமல் கூட என் மனைவியை நான் பார்த்துக் கொள்ள முடியும். பிள்ளைகளுடைய சந்தோசம் தான் எனக்கு எப்போதும் முக்கியம். இதை நான் எப்போதுமே சொல்லிக் கொண்டிருக்கிறேன். யாருக்கும் அறிவுரை சொல்லக்கூடிய இடத்தில் நாம் இல்லை என்று கூறியிருந்தார்.

Advertisement