விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் ஓவியா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட ஆர்மிகளும் கூட இருந்தது. ஆனால், அந்த புகழை வைத்து இவருக்கு எந்த படத்தில் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு ’90ml’ என்ற படத்தில்நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு பல்வேறு விமர்சகர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். மேலும், பிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் இந்த படம் சமூகத்திற்கு சீர்கேடு என்று கூறியிருந்தார். அதேபோல பிரபல சினிமா விமர்சகரான பிரசாந்த் இந்த படத்திற்கு எந்த ஒரு மதிப்பையும் அளிக்காமல்மோசமாக விமர்சனமும் சேகர் .இதனால் அவருக்கும் படத்தின் இயக்குனரான அனிதா உதீப்பிற்கும் டுவிட்டரில் கடும் மோதல் ஏற்பட்டது.
பிரசாந்த் செய்த விமர்சனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆனால், பிரசாந்தின் விமர்சனத்தை விட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தது ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் தான். ஆனால், இதுவரை இந்த படத்தை மாறன் விமர்சனம் செய்யாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தை வரவேற்று பேசியுள்ளார் நடிகை கஸ்தூரி.
உண்மையில் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு என்னிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அந்தக் அதற்கு பதிலாக தான் தேவதர்ஷினிவுடைய கதாபாத்திரத்தை புகுத்தினர். இந்த படத்தை சமீபத்தில் நான் பார்த்தேன் ட்ரைலரை பார்த்து விட்டு இந்த படம் அதிரிபுதிரியாக இருக்கப்போகிறது என்று நினைத்தேன். ஆனால், எனக்கு இந்தப்படம் மிகவும் பிடித்திருந்தது என்னுடன் சேர்த்து பல பெண்களும் அவர்களுடைய காதலுடன் வந்திருந்தனர். குறிப்பாக இளம் தம்பதிகள் கூட கணவன் மனைவியாக வந்திருந்தனர் இரண்டாவது முறையாக அந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்தது.
மேலும், பெண்கள் அனைவருமே அவர்களில் வீட்டு ஆண்களை அழைத்து வந்து இந்த படத்தை கட்டாயம் பார்க்க வைக்கின்றனர். அதையே தான் நானும் நினைக்கிறேன். இந்த படம் தமிழ் சமுதாயத்தை பற்றிய ஒரு நேர்மையான கண்ணோட்டத்தை கொண்டுள்ள ஒரு படம். மேலும் இந்த படம் என்னுடைய வாழ்க்கை என்னுடைய சட்டம் என்று ஒரு போல்டான பெண்களைக் கொண்ட ஒரு கதை ஆகும். மேலும், பெண்கள்சமுதாயத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறையை இந்த படத்தில் தகர்த்துள்ளனர் இது மிகவும் நேர்மையான ஒரு படம் என்று கூறியுள்ளார்