கார்த்தியுடன் எடுத்த செல்பி குறித்து கஸ்தூரி போட்ட ட்வீட்.! இதெல்லாம் ஒரு பொழப்பு.!

0
776
Karthi-Kasturi

தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார் நடிகர் கார்த்தி. சமீபத்தில் இவர் ‘ஜூலை காற்றில்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்ட கஸ்தூரி கார்த்தியுடன் மேடையில் செல்பி எடுக்க அழைத்தார்.

பின்னர் அவர் வந்த போது ஏற்கனவே செல்பி சர்ச்சையில் சிக்கிய கார்த்தியின் தந்தையான சிவகுமாரை பற்றி கிண்டலடித்தார். இதனால் கடுப்பான கார்த்தி செல்பிக்கு ஒரு மரியாதையை இல்லாமல் போய்டுச்சு, கேட்டுட்டு எடுக்க வேண்டும் என்ற ஒரு நாகரிகம் கூட இல்லை என்று கஸ்தூரியை மறைமுகமாக சாடினார்.

- Advertisement -

இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வர, நடிகை கஸ்தூரியை பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், சர்ச்சைகளுக்கெல்லாம் அஞ்சும் ஆளா நம்ம கஸ்தூரி. உடனே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு ட்வீட் செய்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is image-3.png
This image has an empty alt attribute; its file name is image-2.png
This image has an empty alt attribute; its file name is image-1.png

அதில், ஜூலை காற்றில்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்ததுWork out ஆயிருச்சு. இதை நம்பி கொந்தளிக்கிற emotional guys கண்டிப்பா July Kaatril படத்தை என்ஜாய் பண்ணுவீங்க என்று டீவீட்டியுள்ளார். இதனால் பலரும் இன்னும் காண்டாகி பட விளமபரத்திற்கா இப்படி அத்தனை பேர் முன்பும் அசிங்கபடுவதை என்னை கவலை இல்லையா என்று விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement