கத்தி படத்தில் விஜய் தங்கையாக நடித்த நடிகையா இது – அட, 20 வருடத்திற்கு முன்பே விஜய்யுடன் நடித்துள்ளார் பாருங்க.

0
1545
anu
- Advertisement -

பொதுவாகவே சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி நாளடைவில் திரையில் பிரபலமான நடிகர்களாக பல பேர் வலம் வந்திருக்கிறார்கள். ஷாலினி, மீனா என பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் நடிக்க துவங்கி பிற்காலத்தில் மிகப்பெரிய நாயகியாக வலம் வந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் விஜய் கூட குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த இந்த நடிகையும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான்.

-விளம்பரம்-
Image

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. துப்பாக்கி படத்திற்கு பின்னர் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் இரண்டாவது வெற்றியை குவித்தது இந்த படம். விஜய், சமந்தா நடித்த இந்த படத்தில் நடிகர் விஜய் ‘கதிரேசன் என்கிற கத்தி’ மற்றும் ஜீவானந்தம் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்தார்.

- Advertisement -

கத்தி படத்தில் விஜய்யின் தங்கை :

மேலும், இந்த படத்தில் ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் நடித்த விஜய்யின் தங்கையாக நடித்தவர் அனு கிருஷ்ணன். ஆரம்பத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் இந்தி மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பான மஹாபாரதம் தொடரில் கிருஷ்ணர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம். மேலும், ஜேம்ஸ் பாண்ட், அது, கண்டநாள் முதல் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

பிரண்ட்ஸ் படத்தில் குழந்தை நட்சத்திரம் :

அந்த வகையில் விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான ‘பிரண்ட்ஸ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யின் தங்கையாக விஜயலக்ஷ்மி நடித்து இருப்பார். மேலும், இதே படத்தில் வரும் பிளாஸ் பேக் காட்சியில் விஜய்யின் சிறுவயது தங்கையாக நடித்ததும் இவர் தானாம். பின்னர் 13 ஆண்டுகள் கழித்து விஜய்யின் தங்கையாக கத்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததாம்.

-விளம்பரம்-
anukrishnan

13 ஆண்டு கழித்து மீண்டும் விஜய்யுடன் :

இந்த படத்தில் முருகதாஸின் அசிஸ்டன்ட் கார்த்திக் சோம சுந்திரம் மூலம் இந்த படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டாராம். மேலும், அப்போது முருகதாஸ் தன்னை பற்றி கேட்ட போது தான் பிரண்ட்ஸ் படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து இருப்பதாக சொன்னாராம். அதன் பின்னர் அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். மேலும், கத்தி படத்தின் போது தானே விஜய்யுடன் சென்று பேசியதாகவும் அப்போது தயங்கி தயங்கி அவரிடம் பேசியதாகவும் கூறியுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 1-29-1024x433.jpg

விஜய் கொடுத்துள்ள அட்வைஸ் :

மேலும், அவருடன் பேசும் போது நான் தான் பிரண்ட்ஸ் படத்தில் உங்கள் தங்கையாக நடித்தேன் என்று சொன்ன போது ‘அந்த பொண்ணாம்மா நீ ? இப்படி வளந்துட்ட’ என்று விஜய்யே ஆசாரியப்பட்டாராம். மேலும், நன்றாக நடிக்க வேண்டும் கதைகளை நன்றாக தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினாராம் விஜய். கத்தி படத்திற்க்கு பின் இவர் பல படங்களில் நாயகியாக கமிட் ஆகி இருக்கிறாராம். அதே போல கன்னடத்திலும் சில படங்களில் நடித்து வருகிறாராம்.

Advertisement