தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய், சூர்யா. இவர்கள் இருவரும் சினிமா உலகில் வளர்ந்து வரும் காலங்களில் இணைந்து பல படங்களில் நடித்து உள்ளார்கள். அந்த வகையில் இவர் இருவரும் இணைந்து நடித்து சூப்பர் ஹிட்டான படம் “பிரண்ட்ஸ்”. இந்த படம் 2001 ஆம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் வெளிவந்த படம் ஆகும். இந்த படத்தை அப்பச்சன் அவர்கள் தயாரித்து இருந்தார்கள். மேலும், இந்த பிரண்ட்ஸ் படம் மலையாள திரைப்படத்தை தழுவி வந்தது. இந்த படத்தில் தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி, வடிவேலு, ராதாரவி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
விலகிய ஜோதிகா :
பிரண்ட்ஸ் படத்தில் முதலில் தேவயானி நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகாவும், விஜயலட்சுமி நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகை சுவலக்ஷ்மியும் நடிப்பதாக இருந்தது. முதலில் தேவயாணி கதாபாத்திரத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ஜோதிகாவிடம் தான் பேசப்பட்டது. அதன் பின்னர் காரணம் என்னவென்று தெரியவில்லை இந்த படத்தில் இருந்து ஜோதிகா விலகி விட்டார். அதற்கு பிறகு தான் நடிகை தேவயானியை ஒப்பந்தம் செய்யப்பட்டது.
விலகிய சுவலக்ஷ்மி :
அதே போல் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை விஜயலட்சுமி நடித்து இருந்தார். ஆனால், விஜயலட்சுமிக்கு பதில் முதலில் சுவலட்சுமி இடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பின் என்ன காரணம் என்று தெரியவில்லை இந்த படத்தில் இருந்து நடிகை சுவலட்சுமி விலகி விட்டார். அதற்குப் பிறகு தான் நடிகை விஜயலட்சுமி அவர்கள் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனது.
விஜய்யின் சிறு வயது தங்கை :
மேலும், இந்த படத்தில் விஜய்யின் தங்கையாக விஜயலட்சுமி நடித்து இருந்தார். அதே போல இந்த படத்தின் பிளாஸ் பேக் காட்சியில் விஜய்யின் தங்கையாக நடித்தவர் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறார். அவருடைய பெயர் அணு கிருஷ்ணன். குழந்தை நட்சத்திரமான இவர் ஹிந்தியில் ஒளிபரப்பான மஹாபாரதம் தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார்.
கத்தி பட நடிகை :
அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். பின் பல ஆண்டுகள் கழித்து விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தில் மீண்டும் விஜய்யின் தங்கையாக நடித்து இருக்கிறார். ஆம், விஜய் நடித்த கத்தி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தது இவர் தான். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதில் ஜீவாநந்தம் என்ற கிராமத்து இளைஞராக ஊருக்காக போராடும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் விஜய்யின் தங்கையாக நடித்தவர் தான் அனு கிருஷ்ணன்.
வியந்து போய்யுள்ள விஜய் :
இந்த படத்தில் நடித்த போது இவரை விஜய் பார்த்ததும், நான் தான் பிரண்ட்ஸ் படத்தில் உங்கள் தங்கையாக நடித்தேன் என்று சொன்ன போது ‘அந்த பொண்ணாம்மா நீ ? இப்படி வளந்துட்ட’ என்று விஜய்யே ஆசாரியப்பட்டாராம். மேலும், நன்றாக நடிக்க வேண்டும் கதைகளை நன்றாக தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினாராம் விஜய். கத்தி படத்திற்க்கு பின் இவர் பல படங்களில் நாயகியாக கமிட் ஆகி இருக்கிறாராம். தமிழில் இவர் தாலி, இளமை, வெங்காய வெடி போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.