கர்ணன் பட நடிகை கண்ணீருடன் பேசி வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் சினிமாவுக்குள் வந்தார். பின் இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் பெற்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படத்தில் ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது.
கர்ணன் படம்:
அதில் பலர் கொல்லப்பட்டனர், பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகிய படம் தான் ‘கர்ணன்’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் மூதாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் காட்டு பேச்சி முத்தம்மாள். இவர் நெல்லையில் வசித்து வருகிறார். இவர் வாழ்ந்து வரும் பகுதியில் குப்பைகளை மலை போல குவித்து வைத்திருக்கிறார்கள். இதனால் தாங்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டு அவஸ்தைப்படுவதாக கூறியிருக்கிறார்.

காட்டுப்பேச்சி முத்தம்மாள் வீடியோ:
அதுமட்டுமில்லாமல் இது தொடர்பாக கலெக்டருக்கு வேண்டுகோள் வைத்து காட்டு பேச்சி முத்தம்மாள் வெளியிட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காட்டுப்பேச்சி முத்தம்மாள், கண்டா வர சொல்லுங்க, கலெக்டரை கையோடு கூட்டி வாருங்கள். கண்டா வர சொல்லுங்க, எங்க நிலைமையை பாக்குறதுக்கு கலெக்டர் ஐயாவை கையோடு கூட்டி வாருங்கள். கண்டா வர சொல்லுங்க எங்க கொடுமையை பார்ப்பதற்கு கலெக்டர் ஐயாவை கையோடு கூட்டி வாருங்கள்.
View this post on Instagram
வேதனையில் சொன்னது:
இந்த குப்பையை கொட்டி கொட்டி எரித்து எங்க கண்ணெல்லாம் கண்ணீர் வடிக்கிறோம். அந்த கண்ணீருக்கு பதில் சொல்ல கலெக்டர் ஐயா இங்க வரணும். தினம் தினம் பாடுபட்டு சாப்பிடுற ஆளுங்க ஐயா. யாரும் வசதி உள்ள ஆட்களே இல்ல. எங்க குடிசையை வந்து பாருங்க. நாங்க இந்த குப்பையாலும் நாதத்தாலும் புகையாலும் ரொம்பவே அவஸ்தை பட்டு இருக்கிறோம். எங்க நிலைமைய பாருங்க. கண்ணீர் வடித்து சொல்லறேன் கண்டிப்பா நீங்க வரணும். இந்த புகையும் இந்த குப்பையும் வந்து பாருங்க ஐயா என்று கூறி இருக்கிறார்.






