பிரபல நடிகை கௌசல்யா, சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் தங்கர் பச்சான் தன்னை திட்டியது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் வீடியோ தான் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நடிகைகளை விட 80'ஸ் 90'ஸ் காலகட்டத்தில் இருந்த நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் அதிகமாக இருந்தார்கள் என்பது தவிர்க்க முடியாத உண்மை. அதிலும் 90 காலகட்டத்தில் வந்த அனைத்து நடிகைகளும் அழகும் திறமையும் கொண்ட நடிகைகளாகவே இருந்தனர்.

அந்த வகையில் நடிகை கௌசல்யாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் கௌசல்யா. இவர் விஜய், பிரபுதேவா, கார்த்திக், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர். தமிழில் இவர் முரளி நடிப்பில் வெளியான 'காலமெல்லாம் காதல் வாழ்க' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இவருக்கு அடுத்த படத்திலேயே 'நேருக்கு நேர்' படம் மூலம் விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பும் கிடைத்தது.
கௌசல்யா திரைப்பயணம்:
மேலும், நடிகர் விஜயுடன் 'பிரியமுடன்' படத்திலும் கதாநாயகியாக கௌசல்யா நடித்தார். பின்னர் அதே விஜய்யுடன் 'திருமலை' படத்தில் அவருக்கு அண்ணியாக நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பழமொழி படங்களில் நடித்தாலும் கவர்ச்சியாகவே நடித்தது கிடையாது. இடையில் சில ஆண்டுகள் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்த கௌசல்யா, சமீபகாலமாக மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கௌசல்யா பேட்டி:
இந்நிலையில், நடிகை கௌசல்யா தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியில் பேசியிருக்கிறார். அதில், நான் ஒரு திரைப்படத்தில் நடித்தேன். அந்தத் திரைப்படத்திற்கு இயக்குனர் தங்கர் பச்சான் தான். அப்போது ஒரு ஹோட்டலில் ஒரு காட்சியின் ஷூட்டிங் நடந்தது. அந்தக் காட்சியில் அவர் சொல்லிக் கொடுத்ததை நான் சரியாக செய்யவில்லை. உடனே அவருக்கு பயங்கரமாக கோபம் வந்துவிட்டது. அதனால் அவர், 'இந்தக் குரங்கு மூஞ்ச வச்சுக்கிட்டு என்ன நடிக்க வந்திருக்க' என்று திட்டினார்.
தங்கர் பச்சான் திட்டியது:
அது எந்த படம், என்ன டயலாக் என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. அந்தக் காட்சி படத்தில் வந்ததானு கூட எனக்கு தெரியல. ஆனா அவர் திட்டினது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. ஏன்னா, மறுபடியும் அந்த தப்பை பண்ண கூடாதுனு அதை நான் மறக்கல. அப்போ எனக்கு நிஜமாவே கோபம் வரவில்லை. ஏனென்றால் அந்த சமயத்தில் நிறைய விஷயங்களில் நான் கான்சன்ட்ரேட் பண்ண வேண்டியது இருந்தது. இயக்குனர்கள் திட்டும்போது, ஓகே நம்ம தப்பு பண்ணிட்டு இருக்கோம் அதை கரெக்ட் பண்ணிப்போம் என்று சில சமயங்களில் தோணும் என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.
https://www.youtube.com/shorts/PR7HXoY31jc
தங்கர் பச்சான் குறித்து:
தமிழ் சினிமா உலகில் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தங்கர் பச்சான். இவர் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர் என பன்முகங்களைக் கொண்டவர். மேலும், தங்கர் பச்சான் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் என பல ஹிட் திரைப்படங்களை இயக்கி நடித்துள்ளார்.






