தீபாவளிக்கு வெளிவந்த கவினின் ப்ளடி பெக்கர் படம் கைகொடுத்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

0
294
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கவின் வளர்ந்து இருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பிளடி பெக்கர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை நெல்சனிடம் உதவி இயக்குனராக இருந்த சிவபாலன் முத்துகுமார் என்பவர் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகி இருக்கும் பிளடி பெக்கர் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் கவின் பிச்சைக்காரனாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு எப்படியாவது மாளிகையில் வாழ வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இந்த சமயத்தில் நடிகர் ஒருவர் தன்னுடைய பங்களாவில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்கிறார். அதில் கவினும் கலந்து கொள்கிறார். அப்போது அவருக்கு அந்த பங்களா வாழ்க்கை ரொம்ப பிடித்து விடுகிறது. இன்னொரு பக்கம் அந்த பங்களா உறவினர்களுக்கு இடையே சொத்து பிரச்சனை நடக்கிறது.

- Advertisement -

இந்த பங்களாவிற்காக 5 வாரிசுகள் தனித்தனியாக சொத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள். உயிர் மூலம் நிறைய பங்குகளை பெற்ற அந்த மகன் மட்டும் காணாமல் போய்விடுகிறார். அந்த மகனாக நடிக்க கவினை
நடிக்க வைக்க ஒரு குரூப் திட்டம் போடுகிறார்கள். அதற்கு குடும்ப வழக்கறிஞரும் உதவுகிறார். ஒரு கட்டத்தில் மற்றவர்களுக்கு கவின் நடிக்கிறான் என்பது தெரிய வந்து அனைவருமே சேர்ந்து கவினை தீர்த்துக்கட்டி சொத்தை தங்களுடைய வசமாக்க முடிவு செய்கிறார்கள்.

அந்த பணக்கார குடும்பத்தின் சதி திட்டத்திலிருந்து கவின் தப்பித்தாரா? சிக்கினாரா? இல்லை அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து உண்மையிலேயே அந்த மாளிகையை ஆண்டாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் கவின் பிளடி பெக்ராக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. சீக்கிரம் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தன்னுடைய தோற்றத்தில் கவின் மிரட்டி இருக்கிறார். பணக்காரனாக பங்களாவில் சொகுசு வாழ்க்கை வாழ கவின் செய்யும் அட்ராசிட்டி எல்லாம் சிறப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-

சில இடங்களில் நெல்சன் உடைய பிளாக் காமெடியும் நன்றாகவே இருந்திருக்கிறது. கதை புதுமையாக இல்லை என்றாலும் அதை இயக்குனர் வித்தியாசமான முறையில் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஆனால், கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் தான் சொதப்பி விட்டார். படத்திற்கு இசை, ஒளித்தொகுப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது. முதல் பாதையில் பெரிய அளவு சுவாரசியம் இல்லை. என்றாலும் இரண்டாம் பாதி ஓகே.

நிறைய நடிகர்கள் புது முகங்களாகவே இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மட்டும் நம்பி நகர்த்திருக்கிறார் இயக்குனர். சில இடங்களில் அது பாராட்ட பெற்றிருந்தாலும் சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மொத்தத்தில் இந்த படம் ரொம்ப சுமார். தீபாவளி பண்டிகைக்கு இந்த படத்தை ஒருமுறை சென்று பார்க்கலாம்.

நிறை:

கவின் நடிப்பு சிறப்பு

பின்னணி இசை, ஒளிப்பதிவு ஓகே

பிளாக் காமெடி

இரண்டாம் பாதி சுமார்

குறை:

கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் இன்னும் முயற்சி செய்து இருக்கலாம்.

நிறைய புதுமுக நடிகர்கள்

சில காட்சிகள் சலிப்படைய வைக்கிறது.

முதல் பாதி ரொம்ப போர்

விறுவிறுப்பான காட்சிகள் இல்லை

மொத்தத்தில் பிளடி பெக்கர் – குபேரன் ஆக தடுமாற்றம்

Advertisement