Ak61 படத்தில் இணைந்த We Are The Boys பிக் பாஸ் பிரபலம் – இவருக்கு சுக்ரன் உச்சத்துல இருக்கார் போல.

0
414
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஜித். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக படத்தில் சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள்.

-விளம்பரம்-

இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் வலிமை படம் வெளியாகி மூன்றே நாளில் 100 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

- Advertisement -

வலிமை படம் பற்றிய தகவல்:

இப்படி இருக்கும் நிலையில் வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். ‘ஏகே 61’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தற்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.மேலும், இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே சேர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்து இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் வலிமை படம் ஐந்து மொழிகளில் வெளியானதை போல இந்த படத்தையும் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர்.

ஏ கே 61 படம் பற்றிய தகவல்:

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி விட்டார் என்றும் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இயக்குனரிடம் காட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. டெக்னீசியன்கள் டீமில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, ஸ்டண்ட் மாஸ்டராக திலிப் சுப்புராயன் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இருவருமே அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களிலும் பணியாற்றியவர்கள்.

-விளம்பரம்-

ஏகே 61 படத்தில் கவின்:

அந்த மொத்த டீமும் இந்த படத்தில் இணைவதாகவும் கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் என்ன ரோலில் நடிக்க போகிறார்? என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து வருகிறார். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பிறகு இவர் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் மூலம் இவர் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிகராக அறிமுகமானார்.

கவினின் திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். பின்பு 2017 ஆம் ஆண்டு சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார். பிறகு 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படம் மூலம் கதாநாயகனாக சினிமாவில் தடம் பதித்தார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் கவின்.

கவினின் லிப்ட் படம்:

கடந்த ஆண்டு இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் நடிப்பில் லிப்ட் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கவின் அவர்கள் ‘ஊர்குருவி’ எனும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை எனும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண் இயக்க உள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அஜித்துடன் கவின் படம் நடிப்பதால் கவினுடைய மார்க்கெட் சினிமாவில் உயருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement