‘நட்புன்னா என்ன தெரியுமா ?’ – இறந்த நண்பன், வருத்தத்தில் கவின் செய்த செயல்

0
1642
- Advertisement -

நிகழ்ச்சியில் தன்னுடைய நண்பன் குறித்து மனவேதனையில் கவின் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது . தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து வருகிறார். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பிறகு தன்னுடைய நண்பர்களின் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் மூலம் இவர் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிகராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். பின்பு 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் கவின் நுழைந்தார். பிறகு இவர் 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படம் மூலம் கதாநாயகனாக சினிமாவில் தடம் பதித்தார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

- Advertisement -

கவின் திரைப்பயணம்:

பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கவின் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படை சேர்ந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் நடிப்பில் லிப்ட் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் தயாரித்தது. இந்த படம் ஐடி கம்பெனியில் நடக்கும் திகில் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவானது.

டாடா படம்:

மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கவின் நடித்துள்ள “டாடா” படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்துள்ளார். கவின் இப்படத்தில் மணிகண்டன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவருக்கு ஜோடியாக சிந்து என்ற கதாபாத்திரத்தில் அபர்ணாதாஸ் நடித்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

-விளம்பரம்-

நட்பு குறித்து கவின் சொன்னது:

இதனை தொடர்ந்து சில படங்களில் கமிட் ஆகி கவின் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கவினுக்கு விருந்து வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கவின் தன்னுடைய நண்பனை குறித்து கூறியிருந்தது, என்னுடைய நண்பனின் பெயர் மணி. அவருடைய நினைவாக தான் இந்த டாடா திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். அவருடைய கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். என்னுடைய வெற்றிக்கு எல்லாம் காரணங்கள் எப்போதுமே என்னுடைய நண்பர்கள் தான்.

வைரலாகும் கவின் பேசிய வீடியோ:

இந்த நிகழ்ச்சிக்கு நான் போட்டுக் கொண்டு வந்திருக்கும் உடை கூட என்னுடைய நண்பர்களால் கொடுக்கப்பட்டது தான் என்று தன்னுடைய நண்பர்கள் குறித்து பெருமையாக பேசி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் எப்போதுமே கவின் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே அனைவரும் அறிந்ததுதான். தற்போது நிகழ்ச்சியில் கவின் நட்பு குறித்து பேசி இருக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement