தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ரஞ்சித். அதோடு இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் கூட இவர் நடித்து இருக்கிறார். இறுதியாக இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ஜீவன் நடித்த அதிபர் என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழில் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
சிறிய இடைவெளிக்கு பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செந்தூரப்பூவே’ தொடர் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் பழனிச்சாமி என்ற ரோலில் கலக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் ரஞ்சித் அவர்கள் இயக்கி நடித்திருக்கும் படம் குழந்தை C/O கவுண்டம் பாளையம். இந்த படத்தினுடைய ட்ரைலர் வெளியாகி இருகிறது.
ரஞ்சித் இயக்கிய புது படம்:
கடந்த ஜனவரி மாதம் தான் இந்த படத்தில் டீசர் வெளியானது. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஞ்சித் , இந்தப் படம் நாடகக் காதலை குறித்த கதை. பெண் பிள்ளைகளை பெற்றவர்களின் வலியை காண்பிக்கும் படம். சமத்துவ, சமூக நீதிப் பேசும் படம். கொங்கு மக்களின் கலாச்சாரத்தை காட்டும் படம். இந்தப் படத்தை நானே எழுதி, இயக்கி, நடித்திருக்கிறேன். பல நடிகர்களை இந்த படத்தில் அறிமுகமும் செய்து இருக்கிறேன்.
ரஞ்சித் பேட்டி:
இமான் அண்ணாச்சி போன்ற பிரபலமான நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் சமூகம் சார்ந்த படம் கிடையாது. சமத்துவம் உணர்த்தும், குழந்தை காதல், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பது, படிக்க வைத்து, காதல் வியாபாரம் இல்லை என எல்லாமே இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். இந்த படம் வெளிவரும் போது மக்கள் இதை கொண்டாடுவார்கள்.
சர்ச்சை வசனம் குறித்து கொடுத்த விளக்கம்:
ஜாதி பெயரை சொல்லி பணம் பறிக்கும் கூட்டத்தை காண்பிக்கும் படமாக தான் இது இருக்கிறது. நான் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பார்த்த விஷயங்களை கொடுத்திருக்கிறேன். இதற்காக ஏழாண்டு காலம் நான் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். இந்த படத்திற்காக நிறைய தகவல்களையும் நான் சேகரித்து இருக்கிறேன். மேலும், இந்த படத்தின் ட்ரைலர் வரும் காட்சியில் ஓசிக கட்சி என்று வரும். ஓசிக என்பது கட்சி கிடையாது. ஓசி சோறு பார்ட்டி என்பதுனுடைய சுருக்கம்.
மாட்டு கரி சர்ச்சை :
இது ஜாதிய வன்மம் சொல்லும் படம் கிடையாது. சமத்துவம் சகோதரத்துவம் சொல்லும் சிறந்த படம். இங்கு அதிகமானவர்கள் மாட்டு கறி சாப்பிடும் நபர்கள் தான் இருக்கிறார்கள். ஏன் நானும் மாட்டு கறி சாப்பிடுவேன். இது மாட்டு கறி சாப்பிடும் நபர்களை தரம் தாழ்த்தி சொல்லும் படம் கிடையாது, அதற்கு எதிரியும் கிடையாது. அதன் பெயரை சொல்லி ஏமாற்றும் நபர்களை வெளிச்சம் போட்டு காட்டும் படம் தான்’ என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.