ஆப்ரேஷன் பண்ணி தான் குழந்தை பெத்துக்கிட்டேன், குழந்தை பிறந்த 3 நாள் என் கணவர் – கயல் ஆனந்தி உருக்கம்.

0
214
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனந்தி. இவர் ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஈ ராஜூலு” என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். பின் இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு கயல் ஆனந்தி என்று பெயர் வந்தது. இந்த கயல் படத்திற்கு பிறகு தான் இவருக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற பல படங்களில் ஆனந்தி நடித்து இருந்தார்.

- Advertisement -

கயல் ஆனந்தி திருமணம்:

இதனிடையே ஆனந்தி அவர்கள் சாக்ரடீஸ் என்பவரை காதலித்து வந்தார். பின் இவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பதும், முக்கியமாக கலப்பு திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.சாக்ரடீஸ் என்பவர் மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.

கயல் ஆனந்தி திரைப்பயணம்:

இவர் அலாவுதீனின் அற்புத கேமரா மற்றும் அக்னி சிறகுகள் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த படங்களில் கயல் ஆனந்தி நடித்தும் இருக்கிறார். பின் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பிளாட்டோ என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து கயல் ஆனந்தி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ராவணக்கோட்டம் என்ற படத்தில் ஆனந்தி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

கயல் ஆனந்தி பேட்டி:

சந்தனு பாக்யராஜ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியிருக்கிறார். இதை அடுத்து சில படங்களில் ஆனந்தி கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மகன் குறித்து முதன்முறையாக பேட்டியில் கயல் ஆனந்தி, ஒவ்வொரு நாளும் என் மகனை பார்க்கும்போது எனக்கு சந்தோசமாக இருக்கும். தினமும் ஏதாவது ஒரு புது விஷயம் செய்து கொண்டே இருப்பான். நான் ஷூட்டிங் போனால் அவனை ரொம்ப மிஸ் பண்ணுவேன். இப்போ அவன் பேசவும் ஆரம்பித்து விட்டதால் நான் வீட்டுக்கு போன உடனே ஓடி வந்து என்னை கட்டிப்பிடித்து மிஸ் யூ ன்னு சொல்லுவான்.

கணவர்-மகன் குறித்து சொன்னது:

நான் டெலிவரிக்கு முன்பு வரை சூட்டிங் போயிருந்தேன். கர்ப்பமாக இருக்கும் போது எட்டாவது மாதம் வரை சூட்டிங்கில் கலந்து கொண்டிருந்தேன். கர்ப்பமாக இருந்தபோது என்னுடைய பெற்றோரும், என்னுடைய கணவரும் தான் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். எனக்கு நார்மல் டெலிவரி இல்லை, ஆப்ரேஷன் தான் ஆனது. அதனால் குழந்தை பிறந்த பின்னர் முதல் மூன்று நாட்களுக்கு என்னால் அவனை பார்த்துக்கொள்ள முடியவில்லை.

ஜாதி சான்றிதழ் குறித்து சொன்னது :

அப்போ ஒரு அம்மாவாக இருந்து என் கணவர் தான் பார்த்துக் கொண்டார். பிளாட்டோ எனக்கு மகனாக கிடைத்ததற்கு நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று கூறியிருக்கிறார். மேலும், படித்த குடும்பத்தில் கூட ஜாதி என்ற இந்த விஷயத்தை மாற்றவே முடியவில்லை. படித்தாலும் சரி, படிக்கவில்லை என்றாலும் சரி ஜாதி என்பது இருக்கத்தான் செய்கிறது. நான் என்னுடைய மகனுக்கு இன்னும் ஜாதி பெயர் வைக்கவே இல்லை. அதை வைக்கவும் விரும்பவில்லை. மேலும், மகனுக்கு ஜாதி சான்றிதழையும் வாங்க போவதில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement