சொல்பேச்சு கேட்காமல் சின்மயிக்கு வாய்ப்பு கொடுத்ததால் தண்டம் கட்டிய லோகேஷ் கனகராஜ். எவ்வளவு தெரியுமா?

0
174
- Advertisement -

சின்மயி- டப்பிங் யூனியனுக்கு இடையே நடந்த பஞ்சாயத்தை லோகேஷ் கனகராஜ் முடித்து வைத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டப்பிங் யூனியனுக்கு நீண்ட காலமாக தலைவராக இருந்தவர் ராதாரவி. இதனால் அடுத்த மாதம் டப்பிங் யூனியனுக்கு தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ராதாரவியும், நீண்ட காலமாக டப்பிங் யூனியன் பொறுப்புகளில் இருப்பவரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவருமான ராஜேந்திரனும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

ராஜேந்திரனுக்கு யூனியன் உறுப்பினர்கள் மத்தியில் நிறைய செல்வாக்கு இருப்பதால் அவர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து சமீபத்தில் ராஜேந்திரன் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், நான் அண்ணன் ராதாரவியை எதிர்த்து போட்டியிடவில்லை. அவர் தலைவர் பதவிக்கு போட்டியிடாததை பயன்படுத்தி பொறுப்பில்லாத சில பேர் இந்த பதவிக்கு வர முயற்சி செய்தார்கள். இதனால் நான் தலைவர் பதவியில் போட்டியிட தயாரானேன். ஆனால், அந்த சிலருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

- Advertisement -

சின்மயி குறித்து சொன்னது:

மேலும், சின்மயி ஒரு சாதாரண உறுப்பினராக தான் சேர்ந்தார். சந்தா புதுப்பிக்க சொன்னபோது, நான் லைஃப் மெம்பர், சந்தா புதுப்பிக்க தேவையில்லை என்று சொன்னார். அவர் சந்தா செலுத்தாததால் உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இந்த விவகாரம் கோர்ட் வரைக்கும் போனது. நீதிமன்றமும் சங்க நடவடிக்கை சரி என்று தீர்ப்பும் தந்தது. ஆனால், சின்மயி சொன்ன ஒரு பொய்யால் யூனியன் நடத்திய இந்த வழக்கில் சில லட்சங்கள் செலவானது தான் மிச்சம்.

லோகேஷ் குறித்து சொன்னது:

அதோடு அவர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. ஆனால், அவரை டப்பிங் யூனியனில் பயன்படுத்தியது தவறு. லோகேஷ் கனகராஜ், யூனியன் கினியன் அதெல்லாம் விடுங்க. நீங்க பேசுங்க பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி அவரைப் பேச வைத்திருக்கிறார். கோர்ட் தீர்ப்பு வந்த பிறகு சின்மயி திரும்ப உறுப்பினராக சேர்ந்து இருக்கலாம். அதையும் அவர் பண்ணவில்லை. லோகேஷ் கனகராஜ் செய்தது ரொம்ப தவறு என்றெல்லாம் பேசி இருக்கிறார். இப்படி ராஜேந்திரன் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது.

-விளம்பரம்-

லோகேஷ் கனகராஜ் கட்டிய அபராதம்:

இந்நிலையில் லியோ படத்தில் சின்மயி குரல் பயன்படுத்தியதற்கு லோகேஷ், டப்பிங் யூனியனுக்கு 50000 செலுத்தி இருந்தார். பின் இது தொடர்பாக டப்பிங் யூனியன் தரப்பில் கூறியிருப்பது, மெம்பராக இல்லாதவர்களுக்கு ஒன் டைம் இந்த மாதிரி கட்டுவது வழக்கம் தான். கலையரசன் ஒரு படத்துக்கு டப்பிங் பேசிய போது அவர் பணம் கட்டி இருக்கிறார். வேறு சிலரும் இதே மாதிரி கட்டி இருக்கிறார்கள். அந்த வகையில் சின்மயி பேச வைத்ததற்காக இந்த பணம் கட்டப்பட்டிருக்கிறது. தயாரிப்பு தரப்பு தான் இந்த பணத்தைக் கட்டனும். ஆனால், இந்த படத்துக்கு சின்மயி குரல் வேண்டும் என்று லோகேஷ் கேட்டதால் தான் அவர் தரப்பிலிருந்து இந்த பணம் கட்டிருக்காங்க.

ராஜேந்திரன் பேட்டி:

இதை நாங்க வரவேற்கிறோம். இதையே நல்ல ஒரு அறிகுறியா எடுத்துக்கொண்டு டப்பிங் யூனியனுக்கு சின்மயி திரும்பவும் வந்தாலும் வரவேற்போம் என்று கூறியிருந்தார். பின் இது குறித்து ராஜேந்திரன், சின்மயி விவகாரத்தில் எது நிஜமோ, எது நடந்ததோ அதையே நான் பேசினேன். பேட்டி அளிப்பதற்கு முன்பே சங்க கூட்டத்தில் இது குறித்து பேசினேன். ஒரு படைப்பாளியா ஒரு படத்துக்கு யார் தேவை என்பதை இயக்குனர் முடிவு செய்யலாம். ஆனால், யூனியன் வரும்போது அதற்கு சில சட்டதிட்டங்கள் இருக்கும். அது கட்டுப்பட்டு செயல்படுகிறது தான் ஆரோக்கியமானதாக இருக்கும். தம்பி லோகேஷ் கனகராஜ் பணம் கட்டிட்டாருன்னு நான் கேள்விப்பட்டேன். அவருக்கு என் நன்றி என்று கூறியிருந்தார்.

Advertisement