லைஸன்ஸ் இல்லாமல் பைக் ஓட்டிய தனுஷ் மகன் – வீட்டிற்கே சென்று அபராதம் போட்ட அதிகாரிகள். எவ்வளவு தெரியுமா?

0
580
Dhanush
- Advertisement -

தனுஷ் மகன் யாத்ரா R 15 பைக் ஓட்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் தற்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமாவில் 18 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து இருந்தவர்கள் தனுஷ்-ஐஸ்வர்யா. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்து இருந்தது.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா- தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு இருந்தார்கள். மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து வருகிறார்கள். ஆனால், ஒரு பலனும் இல்லை. மேலும், ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்ய வில்லை என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு:

அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இருந்தது. இதனை அடுத்து தனுஷ் அவர்கள் கேப்டன் மில்லர் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் தனுஷ் போயஸ் கார்டனிலேயே புதிதாக வீடு கட்டி குடியேறி இருக்கிறார். போயஸ் கார்டனில் தான் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இருக்கிறார். போயஸ் கார்டனில் வீடு கட்டுவது தனுசுக்கு கனவாக இருந்தாலும் விவாகரத்திற்கு பிறகு தன்னுடைய மகன்களை சந்தித்து பேச வசதியாக இருப்பதற்காக தான் போயஸ் கார்டனில் வீடு கட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

அதே போல் நடிகர் தனுஷின் மகன்கள் இரு வீட்டிலையும் நேரம் செலவிடுகிறார்கள். ப்படி இருக்கும் நிலையில் தனுஷ் மகனுடைய பைக் ஓட்டும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதாவது, தனுஷின் மகன் யாத்ரா ஆர் 15 பைக்கை போயஸ் கார்டனில் ஓட்ட பழகிருக்கிறார்.அவருக்கு உதவியாளராக ஒருவர் சொல்லிக் கொடுக்கிறார். இதை அங்கிருந்த ஒருவர் படமாக எடுத்து இருக்கிறார்.

இதை பார்த்த உதவியாளர் போட்டோ எடுக்காதீர்கள், வீடியோ எடுக்காதீர்கள் என்று கேட்டவுடன் பொது சாலையில் தான் எடுக்கிறோம் என்று கூறி எடுத்திருக்கிறார்கள். ந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து யாத்ராக்கு இன்னும் 18 வயதே ஆகவில்லை. அவர் பைக் ஓட்டி பழக வேண்டும் என்றால் பாதுகாப்பான யாரும் இல்லாத இடத்தில் தான் ஓட்டி பழக வேண்டும். லைசென்ஸ் உரிமை இல்லாமல் ஆர் 15 பைக்கை ஓட்டி பழகுவது தவறானது என்றும் கூறி வந்தனர்.

மேலும், ஓட்டுநர் உரிமம் இல்லாத யாத்ரா பைக் ஒட்டியதற்கு அவர் மீது போக்குவரத்து துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விமர்சனங்களும் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் பைக்கின் நண்பர் சரியாக தெரியாததாலும் தனுஷின் மகன் மாஸ்க் அணிந்து இருந்ததாலும் அது தனுஷ் மகன் தானா என்று உறுதிப்படுத்த போக்குவரத்து போலீசார் தனுஷின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அதன்பேரில் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர் வாகனம் ஓட்டியதாக ரூ.1,000 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement