கலப்புத்திருமணம் செய்த கயல் ஆனந்தி தனது மகனின் ஜாதி சான்றிதழ் விஷயத்தில் எடுத்து இருக்கும் முடிவு பலரின் பாராட்டுகளை பெற்று இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனந்தி. நடிகை ஆனந்தி அவர்கள் ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஈ ராஜூலு” என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு கயல் ஆனந்தி என்று பெயர் வந்தது.இந்த கயல் படத்திற்கு பிறகு தான் இவருக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.

Advertisement

தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘ஏஞ்சல்’, ‘இராவணக் கோட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கயல் ஆனந்தி திடீர் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  சாக்ரடீஸ் என்பவருடன் ஆனந்திக்கு திருமணம் நடைபெற்றது. சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின் மைத்துனர் ஆவார். இவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

மேலும், இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பதும், முக்கியமாக கலப்பு திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் கயல் ஆனந்தி தற்போது ராவணக்கோட்டம் என்ற படத்தில் நடித்திருக்கிறார் பாக்யராஜ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது எந்த நிலையில் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் இந்த படத்தின் இயக்குனர் சாந்தனு மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

Advertisement

இந்த பேட்டியின் போது ஆனந்தியிடம் நீங்கள் கலப்பு திருமணம் தான் செய்து இருக்கிறீர்கள், சாதி அரசியல் குறித்து என்ன நினைக்கிரீகர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது இதற்கு பதில் அளித்த அவர் படித்த குடும்பத்தில் கூட ஜாதி என்ற இந்த விஷயத்தை மாற்றவே முடியவில்லை. படித்தாலும் சரி, படிக்கவில்லை என்றாலும் சரி ஜாதி என்பது இருக்கத்தான் செய்கிறது. நான் என்னுடைய மகனுக்கு இன்னும் ஜாதி பெயர் வைக்கவே இல்லை. அதை வைக்கவும் விரும்பவில்லை .

முன்பெல்லாம் வேலையை வைத்து ஜாதியை பிரித்தார்கள் ஆனால் தற்போது இருக்கும் தலைமுறையில் கூட அதனை தொடர வேண்டும் என்று எனக்கு தோணவில்லை மேலும் இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்னுடைய பெற்றோர்கள் கூட என்னுடைய முடிவை எப்போதும் கேட்டு அது தவறாக இருந்தால் எனக்கு அதை எடுத்துச் சொல்வார்கள் ஆனால் அது சரியாக இருந்தால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள்’ என்று கூறியுள்ளார்.

Advertisement