போதைப்பொருள் கடத்தல் பணத்தில் தான் கயல் ஆனந்தியின் மங்கை திரைப்படம் தயாரிக்கப்பட்ட தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே போதை பொருள் கும்பலை கைது செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக டெல்லியில் போதை பொருள் கடத்தல் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்து இருந்தது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனில் போலீசார் சோதனை நடத்தி இருந்தது.

அதில் சுமாராக 1700 கிலோ மெப்பட்ரோன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்யப்பட்டது. அதற்பின் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துக்கு 50 கிலோ போதை பொருளை கடத்த முயன்ற போது டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் டெல்லி போலீஸ் இணைந்து அதிரடியாக சோதனை நடத்தி கைது செய்திருக்கிறார்கள். தேங்காய் பொடி மற்றும் ஊட்டச்சத்து பவுடருடன் சேர்த்து இந்த சூடோ பெடரின் எனப்படும் போதைப் பொருளை கடத்த முயற்சித்து இருந்தார்கள்.

Advertisement

போதை பொருள் கடத்தல் கும்பல்:

பின் போலீஸ் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரிணை நடத்தி இருக்கிறார்கள். அப்போது விசாரணையில் இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லியை மையமாக வைத்து தான் வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவது தெரிய வந்திருக்கிறது. மேலும், 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதை பொருள் கடத்தலுக்கு முக்கிய நபராக செயல்பட்டவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் தெரிய வந்திருக்கிறது.

போலீஸ் விசாரணை:

இவர் இதுவரை இறைவன் மிகப் பெரியவன், இந்திரா போன்ற படங்களை தயாரித்து இருந்தார். தற்போது இவர் கயல் ஆனந்தி நடித்து இருக்கும் மங்கை என்ற திரைப்படத்தை தயாரித்து இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதோடு இவர் போதை பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தன்னுடைய சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து தான் இந்த போதப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார் என்று கூறப்படுகிறது.

Advertisement

மங்கை படம்:

மேலும், மைதீன், இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அதேபோல் சலீம் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதை அடுத்து போலீஸ் ஜாபரை கைது செய்து அடுத்த கட்ட விசாரணை நடத்தி இருக்கிறது. அப்போது மார்ச் 1ஆம் தேதி கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருந்த மங்கை திரைப்படம் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், இவர் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டதால் இந்த படம் வெளியாகவில்லை.

Advertisement

படம் குறித்த சர்ச்சை:

அது மட்டும் இல்லாமல் படம் குறித்த அப்டேட்டும் தெரியவில்லை. இதனை அடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினரின் விசாரிக்கையில் மங்கை படத்தை போதை பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் தான் தயாரித்ததாக ஜாபர் சாதிக் ஓப்பு கொண்டிருக்கிறார். மேலும், இந்த விவகாரத்தில் இன்னும் சில தமிழ் சினிமா பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் கூறப்படுகிறது. ஆனால், யாரெல்லாம் இந்த விவகாரத்தில் சிக்க போகிறார்கள் என்பது கூடிய விரைவில் தெரியும்.

Advertisement