ஜி வி பிரகாஷோட அந்த படத்தில் நடித்தது ஒரே காரணம் இதான். கயல் ஆனந்தி சொன்ன நச் பதில்.

0
294
Anandhi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் ஆனந்தி. இவர் 2012ஆம் ஆண்டு வெளிவந்த பஸ் ஸ்டாப் எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவந்த பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்பு கயல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஆனந்தி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து இவர் விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, பரியேறும் பெருமாள் என பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆனந்தியின் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவர் தான் நடித்த படங்களை குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என் கிட்ட சொன்ன கதை ஒன்று ஆனால் எடுத்த கதை வேறு. அந்த படம் திரிஷா இல்லனா நயன்தாரா. ஏன்டா, இந்த படத்தில் நடித்தேன் என்று நான் பீல் பண்ணி இருக்கிறேன்.

இதையும் பாருங்க : விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேங்கில் நடிக்கும் நடிகர்கள் யார் யார் தெரியுமா ? செம மாஸா இருக்கே.

- Advertisement -

நான் ஏன் அந்த படத்தில் நடித்தேன் என்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிறகு நடிகர்களையும், போட்ட பணத்தையும் நினைத்து புலம்பினார். அது எனக்கு பார்க்கும்போது பாவமாக இருந்தது. அதனால் தான் நான் அந்த படத்தில் நடித்தேன் என்று கூறியிருந்தார். இப்படி ஆனந்தி கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை காதல் படம் தான் திரிஷா இல்லனா நயன்தாரா. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். சிம்ரன், ஆர்யா, பிரியா ஆனந்த் மூவரும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-
Advertisement