தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனந்தி. நடிகை ஆனந்தி அவர்கள் ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஈ ராஜூலு” என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு கயல் ஆனந்தி என்று பெயர் வந்தது.
இந்த கயல் படத்திற்கு பிறகு தான் இவருக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஜனவரி மாதம் இணை இயக்குநரான சாக்ரடீஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின் மைத்துனர் ஆவார். இவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். திருமணம் குறித்து பேசிய ஆனந்தி, நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு எடுத்திருந்தோம். அந்த நாளுக்காக இருவரும் காத்திருந்தோம். அந்த நாள் சமீபத்தில் அமைந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.
திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். என் கைவசம் 4 படங்கள் உள்ளன. அந்த நான்கு படங்களிலும் முதலில் நடித்துக்கொடுப்பேன். அதன் பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்வேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஆனந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருந்ததாக அறிவித்து இருந்தார். சமீபத்தில் தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இவரது மகனின் பெயர் PLATO. கயல் ஆனந்தி திருமணத்திற்கு பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் இவர் கர்ப்பமாக இருந்த போது கூட நடித்து இருக்கிறார். கயல் ஆனந்தி தற்போது இவர் ‘யுகி’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் zac harriss இயக்கி இருக்கும் இந்த படத்தின் கதிர், நரேன், கயல் ஆனந்தி, நட்டி நடராஜன் ஆகியோர் நடித்து இருக்கின்றனர். இந்த படம் வரும் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் பேசிய கயல் ஆனந்தி ‘நான் கயல் திரைப்படம் பண்ணி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் இப்போதும் அதே அன்பை தமிழ் சினிமா எனக்கு கொடுப்பதை நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது அதற்கு தமிழ் திரைத்துறைக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் மிக்க நன்றி இது திரைப்படம் தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு ஸ்பெஷலான திரைப்படம் ஏனென்றால் இந்த படம் பண்ணும் போது நான் உண்மையில் கர்ப்பமாக இருந்தேன் இந்த படத்தை சில ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது எனக்கு ஒரு நல்ல நினைவாக இருக்கும்’