பொதுவாகவே சின்னத்திரை, வெள்ளி திரையில் நடிக்க வரும் நடிகைகள் பல பிரச்சனைகளை சந்தித்து தான் வருகிறார்கள். மீடியாவிற்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு தடைகளை தாண்டி தான் அவர்கள் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து நடிகை அபி நவ்யா பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். நியூஸ் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் அபி நவ்யா. பின் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் சீரியலில் சுவாதி ஆகவும், கண்மணி சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம் பேசுதடி என்ற சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்திலும், சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் கயல் சீரியலிலும் நடித்து வருகிறார். செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி சீரியல்களில் கலக்கி வருகிறார் அபி நவ்யா. இவர் சீரியல் நடிகர் தீபக் குமார் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.
அபி நவ்யா நிச்சயதார்த்தம்:
பின் பெற்றோர்களின் சம்மதத்துடன் இவர்களுடைய நிச்சயதார்த்தம் சமீபத்தில் தான் நடந்தது. நடிகர் தீபக் குமார் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் என்றென்றும் புன்னகை என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பது, நான் நியூஸ் ஆங்கராக இருக்கும் போது தான் எனக்கு சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. முதலில் எனக்கு பிரியமானவள் என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது.
அபி நவ்யா அளித்த பேட்டி:
அந்த சீரியலை தொடர்ந்து எனக்கு பல சீரியலில் வாய்ப்பு வந்தது. அதேபோல் நியூஸ் ஆங்கரிங்களிலும் வாய்ப்பு வந்தது. இரண்டையுமே பேலன்ஸ் பண்ணிக் கொண்டுதான் இருந்தேன். பொதுவாகவே சீரியலில் நடிக்கணும் என்று நினைத்தால் அங்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நீச்சலடித்து தான் வரணும். ரொம்ப கஷ்டப்பட்டு தான் சின்னத்திரை சீரியலில் நடிக்க முடியும். நான் வாய்ப்பு தேடி போகும் போது என்கிட்ட நேரடியாகவே முகத்துக்கு நேராக அட்ஜெஸ்ட் பண்ண சொல்லி கேட்டார்கள்.
ஆடிசனுக்கு போன இடங்களில் நடந்தது:
இதுவரை நான் கிட்டத்தட்ட 250 ஆடிசனுக்கு மேல் பல இடங்களில் போய் இருக்கேன். இப்படிப்பட்ட விஷயத்தை தான் நேரடியாக கேட்கிறார்கள். என்னுடைய இன்ஸ்டாகிராமில் காஸ்டிங் டைரக்டர் என்று சொல்லி ஒருத்தர் எனக்கு மெசேஜ் அனுப்பினார். என்னுடைய அடையாளத்தை துல்லியமாக அந்த நபர் பேசினார். பின் நான் அந்த நபரை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டேன். அதற்குப்பிறகுதான் அதுபோலி என்று எனக்கு தெரிந்தது. புதிதாக சினிமாவுக்குள் நுழைய நினைக்கும் நடிகைகள் பலருக்கும் இந்த மாதிரி பிரச்சினைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.
பெண்களின் நிலை:
ஏமாற்றும் ஆட்களும் கிளம்பி தான் வருகிறார்கள். அதிலும் நம்முடைய புகைப்படத்துடன் கூடிய புரொபைலை கேட்பார்களே தவிர வேறு எதுவுமே கேட்க மாட்டாங்க. இப்படி பல பெண்கள் ஏமாந்து விடுகிறார்கள். இந்த மாதிரியான ஆட்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இன்னும் சினிமா உலகில் எத்தனையோ மீடு புகார் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த மாதிரி ஆட்களை திருத்தவே முடியாது. பெண்கள் நம்ப தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.