‘அவர் என் கையில் குழந்தையை வைத்த போது’ – குழந்தை பிறந்த செய்தியை நெகிழ்ச்சியான புகைப்படத்துடன் அறிவித்த கயல் சீரியல் நடிகை.

0
508
abi
- Advertisement -

ஈரமான ரோஜாவே சீரியல் நடிகர் தீபக் மற்றும் கயல் சீரியல் நடிகை அபி நவ்யா ஜோடிக்கு குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் தீபக் – அபிநவ்யா. இவர்கள் இருவரும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த திருமணம் என்ற சீரியலில் நடித்து இருந்தார்கள். இந்த சீரியல் இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை கொடுத்தது.

-விளம்பரம்-

பின் இவர்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த என்றென்றும் புன்னகை என்ற சீரியலில் நடித்து இருந்தார்கள். இந்த சீரியலின் மூலம் தான் தீபக் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதற்கு பின் தீபக் சித்திரம் பேசுதடி சீரியலில் நடித்து இருந்தார். அதேபோல் அபிநவ்யா அவர்கள் சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

அபிநவ்யா-தீபக் திருமணம்:

இதனிடையே இவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தார்கள். பின் இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அபி நவ்யா மற்றும் தீபக் இருவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின் சென்னையில் இருக்கும் ஒரு திருமண ஹாலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமண புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைராலகி இருந்தது.

ஈரமான ரோஜாவே 2 சீரியல்:

தற்போது தீபக் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி கொண்டே என பல நடிகர்கள் நடிக்கிறர்கள். இந்த தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சீரியலில் பார்த்தி, ஜீவா இருவரும் அண்ணன், தம்பி. அதேபோல் பிரியா, காவ்யா இருவரும் அக்கா, தங்கை.

-விளம்பரம்-

கர்ப்பமாக இருந்த அபி நவ்யா :

இதில் காவ்யா-ஜீவா இருவரும் காதலித்து இருந்தார்கள். ஆனால், விதி செய்த வலியால் பார்த்தி- காவியாவையும், ஜீவா-ப்ரியாவையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். சீரியலில் ஜோடி மாறி திருமணம் ஆன பிறகு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அபிநவ்யா-தீபக் இருவரும் விரைவில் தங்களுக்கு குழந்தை பிறக்க இருப்பதாக அறிவித்து இருந்தனர்.

அபிநவ்யா வளைகாப்பு விழா :

இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.கடந்த மாதல் தான் 9 மாதம் கர்ப்பமாக இருந்த அபி நவ்யாவிற்கு சமீபத்தில் தான் சீமந்த விழா நடைபெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் அபி நவ்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நவ்யா ”நம் மீது பொழிந்த கடவுளின் கருணையின் விளைவாக விலைமதிப்பற்ற பரிசை உணர்ந்தோம். குழந்தை அவர் என் கைகளில் வைக்கப்பட்டபோது, ​​நான் உயிருடன் மற்றும் உற்சாகமாக உணர்ந்தேன்.

Advertisement