கயல் சீரியலால் என் வாழ்க்கையே போச்சு – ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகளை செய்த நடிகர் ஐயப்பன் மனைவி – முழு விவரம் இதோ

0
219
- Advertisement -

நடிகர் ஐயப்பனின் மனைவி கயல் சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் ரகளை தான் தகவல் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான சீரியல் கயல். இது தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டது. சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல், தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். எழில் சிறு வயதில் இருந்தே கயலை காதலித்து வருகிறார். ஆரம்பத்தில் கயல், எழிலை நண்பராக தான் பார்த்தார். பின் எப்படியோ எழில், தன்னுடைய காதலை கயலிடம் சொன்னார். பின்பு ஒரு கட்டத்தில் கயலுக்கு எழில் மீது காதல் ஏற்படுகின்றது.

-விளம்பரம்-

இருந்தாலும், கயல் அதை சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் பல போராட்டங்களுக்கு பின் கயல்-எழில் திருமணம் நடந்தது. இனி அடுத்து என்ன? என்று தான் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் மீனா குமாரி, வழக்கு எண் முத்து ராமன், சுமங்கலி, உமா ரியாஸ் கான், ஐயப்பன், ஜீவா ராஜேந்திரா, அபி நவ்யா, சுபா கீதா, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 3 இல் கயல் சீரியல் இடம் பிடித்து வருகிறது. மேலும், இந்த சீரியலில் கயலின் அண்ணன் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் ஐயப்பன். சீரியலில் அண்ணன் மூர்த்தி எப்போதுமே பொறுப்பில்லாமல் குடித்துக் கொண்டு ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருப்பவர்.

- Advertisement -

கயல் சீரியல்:

சில மாதங்கள் தான் அவருடைய கதாபாத்திரத்தை அப்படியே மாற்றப்பட்டிருக்கிறது. இவர் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்து ஒரு நல்ல அண்ணனாகவும், பொறுப்பான புருஷன் ஆகவும் மாறி இருக்கிறார்.
இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மனைவி, கயல் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்திருக்கும் ரகளை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சென்னை மதுரவாயில் பகுதியில்
ஒரு வீட்டில் கயல் சீரியல் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

ஐயப்பன் மனைவி புகார்:

இந்த இடத்திற்கு வந்த நடிகர் ஐயப்பனின் மனைவி சீரியல் நிர்வாகத்திடம், என்னுடைய கணவருடன் பேச வேண்டும். அவர் எங்கே? குடித்து விட்டு வந்து வீட்டில் பயங்கரமாக ரகளை செய்கிறார். ரொம்ப மோசமாக நடந்து கொள்கிறார். இதனால் என்னுடைய வாழ்க்கையே சீரழிந்து விட்டது. சில வருடங்களாகவே ஐயப்பன் வீட்டுக்கே வருவதில்லை. குழந்தைகளை கூட பார்க்க வருவதில்லை, பணமும் கொடுப்பதில்லை.
எனக்கு நியாயம் வேண்டும் என்று கேட்டு பிரச்சினை எல்லாம் செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஒரு மாதத்திற்கு முன்பு தான் இவர் மதுரவாயில் அருகில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் ஐயப்பனின் மீது புகார் அளித்திருந்தார்.

-விளம்பரம்-

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரகளை:

இதை அடுத்து இவர் கயல் சீரியல் நிர்வாகத்திடமும் ஐயப்பனை பற்றி புகார் அளித்திருக்கிறார்.
இதனால் சீரியல் நிர்வாகத்தினருக்கும் ஐயப்பனின் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக இருந்தது. பின் இது தொடர்பாக கயல் சீரியல் நிர்வாகிகள், இது பிரைவேட் இடம். உங்கள் பேமிலி பிரச்சினை வீட்டில் தான் வைத்துக் கொள்ள வேண்டும். ஷூட்டிங் நடக்கிற இடத்தில் வைக்க கூடாது. அவர் ஷூட்டிங் முடித்துவிட்டு வருவார் என்று சொல்ல ஐயப்பனை சந்திக்க விடாமல் அவர்கள் பேசி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதை அடுத்து ஐயப்பனின் மனைவி அளித்த பேட்டியில், கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்தவர் தான் என்னுடைய கணவர்.

ஐயப்பன் மனைவி பேட்டி:

இப்போது கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் மூன்று வருடமாக வீட்டுக்கு எதுவும் காசு தருவதில்லை, பார்த்துக்கொள்வதில்லை. ஷூட்டிங்கில் அவர் கஞ்சா அடித்த மாதிரியே இருப்பார். அதனால் தான் ரொம்ப மன உளைச்சலுக்கு நான் ஆளாகி இருக்கிறேன். கடைசி இரண்டு மாதமாக அவர் ரொம்ப ஆக்ரோஷமாக மாறிவிட்டார். இதனால் வீட்டுக்கும் வருவதில்லை. அதனால்தான் செட்டுக்கே வந்திருக்கிறேன். ஒரு நியாயம் கேட்கலாம் என்று சொல்லி வந்தால் உள்ளே விட மறுக்கிறார்கள். என் புருசனிடம் பேசவும் விடவில்லை. கதவை இழுத்து மூடி விட்டார்கள். இந்த சீரியலால் என் வாழ்க்கையே போச்சு என்று வேதனையில் கூறியிருக்கிறார்.

Advertisement