கயல் சீரியலில் முக்கிய நடிகர் மாற்றி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான சீரியல் கயல். இந்த சீரியல் தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டது. சீரியலில் கடின உழைப்பாளியாக ஹீரோயின் கயல், தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். எழில் சிறு வயதில் இருந்தே கயலை காதலித்து வருகிறார். ஆரம்பத்தில் கயல், எழிலை நண்பராக தான் பார்த்தார். பின் எப்படியோ எழில், தன்னுடைய காதலை கயலிடம் சொன்னார். பின்பு ஒரு கட்டத்தில் கயலுக்கும் எழில் மீது காதல் ஏற்படுகின்றது.

இருந்தாலும், கயல் அதை சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் பல போராட்டங்களுக்கு பின் கயல்-எழில் திருமணம் நடந்தது. இனி அடுத்து என்ன? என்று தான் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் மீனா குமாரி, சஞ்சீவ், வழக்கு எண் முத்து ராமன், சுமங்கலி, உமா ரியாஸ் கான், ஐயப்பன், ஜீவா ராஜேந்திரா, அபி நவ்யா, சுபா கீதா, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 3 இல் கயல் சீரியல் இடம் பிடித்து வருகிறது.
கயல் சீரியல்:
மேலும், இந்த சீரியலில் கயலின் அண்ணன் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் ஐயப்பன். சீரியலில் அண்ணன் மூர்த்தி எப்போதுமே பொறுப்பில்லாமல் குடித்துக் கொண்டு ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருப்பவர். சில மாதங்கள் தான் அவருடைய கதாபாத்திரத்தை அப்படியே மாற்றப்பட்டிருக்கிறது. இவர் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்து ஒரு நல்ல அண்ணனாகவும், பொறுப்பான புருஷன் ஆகவும் இருக்கிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரகளை:
சில மாதங்களுக்கு முன் இவருடைய மனைவி, கயல் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த ரகளை அனைவரும் அறிந்ததே. அதாவது, சென்னை மதுரவாயில் பகுதியில் கயல் சீரியல் ஷூட்டிங் நடந்தது. இந்த இடத்திற்கு வந்த நடிகர் ஐயப்பனின் மனைவி சீரியல் நிர்வாகத்திடம், என்னுடைய கணவருடன் பேச வேண்டும். அவர் எங்கே? குடித்து விட்டு வந்து அவர் பயங்கரமாக ரகளை செய்கிறார். ரொம்ப மோசமாக நடந்து கொள்கிறார். இதனால் என்னுடைய வாழ்க்கையே சீரழிந்து விட்டது. சில வருடங்களாகவே ஐயப்பன் வீட்டுக்கே வருவதில்லை. குழந்தைகளை கூட பார்க்க வருவதில்லை, பணமும் கொடுப்பதில்லை.
https://www.youtube.com/watch?v=u-nNFjTMnfg
ஐயப்பன் மனைவி புகார்:
எனக்கு நியாயம் வேண்டும் என்று கேட்டு பிரச்சினை எல்லாம் செய்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு மாதத்திற்கு முன்பு தான் இவர் மதுரவாயில் அருகில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் ஐயப்பனின் மீது புகார் அளித்திருந்தார். இதை அடுத்து இவர் கயல் சீரியல் நிர்வாகத்திடமும் ஐயப்பனை பற்றி புகார் அளித்திருந்தார். இதனால் சீரியல் நிர்வாகத்தினருக்கும் ஐயப்பனின் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இந்த விவகாரத்திலிருந்து ஐயப்பனை சீரியல் பார்க்க முடியவில்லை. அவருடைய கதாபாத்திரத்தை வேறு ட்ராக்கில் கொண்டு சென்றிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஐயப்பன் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்கிற முடிவில் இருப்பதால் அது தொடர்பான வேலையில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் மாற்றம்:
தற்போது கயல் சீரியலில் இருந்து ஐயப்பன் விலகி இருக்கும் தகவல் தான் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக சீரியலுக்கு தொடர்பானவர்கள் அளித்த பேட்டியில், சன் டிவியைப் பொறுத்தவரை சீரியல் நடிக்கும் நடிகர் அல்லது நடிகைக்கு தனிப்பட்ட காரணங்களால் பிரச்சனையில் சிக்கினால் அந்த பிரச்சினையை முடித்துவிட்டு வாருங்கள் என்று சொல்லிவிடுவார்கள். ஐயப்பன் விவகாரத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. சூட்டிங் நடக்கும் இடத்திற்கு அவருடைய மனைவி பிரச்சனை செய்தது சேனலுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பிடிக்கவில்லை. இந்த மாதிரி பிரச்சினையால் சீரியல் ரேட்டிங் பாதிக்கப்படலாம் என்று நினைத்து ஐயப்பனை பிரச்சனையை முடித்து விட்டு வர சொல்லி விட்டார்கள். தற்போது சீரியலில் ஐயப்பன் நடித்த மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிகர் ஷ்யாம் கமிட் ஆகி இருக்கிறார்.






