அடேங்கப்பா, கயல் சீரியலில் சைத்ரா ரெட்டிக்கு இவ்வளவு சம்பளமா? – வாயை பிளந்த ரசிகர்கள்

0
1048
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. அதிலும் வெள்ளித்திரை நடிகர்களை விட சின்னத்திரை சீரியல் நடிகர்கள் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்கள். அதிகம் ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படம், வீடியோ வெளியிடுவது என்று சின்னத்திரை நடிகர்கள் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதிலும் ஒவ்வொரு சேனலிலும் மக்களின் ஃபேவரிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதிலும் சன் டிவியில் புதிது புதிதாக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் கயல். தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

கயல் சீரியல் பற்றிய தகவல்:

மேலும், சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல் தன்னுடைய வருமானத்தை வைத்து மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார். கயல் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை சுற்றியும் மற்றும் அவரை காதலிக்கும் சஞ்சீவ் சுற்றியும் தான் கயல் உள்ளது. தற்போது சன் டிவி சீரியல் அதிக டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் முன்னிலையில் உள்ளது. இந்த சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக சஞ்சீவ்வும் நடிக்கிறார்கள்.

சைத்ரா ரெட்டியின் சின்னத்திரை பயணம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் மக்கள் காதல் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. அதன் பின் இவர் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து எல்லோருக்கும் பிடித்தமான வில்லியாக திகழ்ந்தவர். கொடூரமான வில்லியாக இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது. இவருடைய சொந்த ஊர் பெங்களூர். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்தது.

-விளம்பரம்-
Chaitra Reddy About Valimai | வலிமை சைத்ரா ரெட்டி

சைத்ரா ரெட்டி நடித்த படம்:

திருமணத்திற்குப் பிறகும் இவர் சீரியலில் அதிக அழகுடனும், பொலிவுடனும் நடித்து வருகிறார். இதுவரை நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பார்த்த இவரை பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் பார்க்க புதிதாக இருக்கிறது. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் கொடுத்து வரும் வலிமை படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சைத்ரா நடித்திருந்தார். வலிமை படத்திற்கு பிறகு இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இருந்தும் இவர் சின்னத்திரை சீரியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

kayal

சைத்ரா ரெட்டி வாங்கும் சம்பளம்:

இந்நிலையில் சைத்ரா ரெட்டி குறித்த தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், கயல் சீரியலில் நடிகை சைத்ரா ரெட்டி வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் தான். கயல் சீரியலில் சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். அதுமட்டுமில்லாமல் கயல் சீரியலில் நடிக்கும் நடிகர்களில் இவருக்கு தான் இவ்வளவு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

Advertisement