சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டது. சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல், தன்னுடைய மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக சீரியலில் எழிலின் திருமண ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. எழில் சிறு வயதில் இருந்தே கயலை காதலித்து வருகிறார். ஆரம்பத்தில் கயல், எழிலை நண்பராக தான் பார்த்தார்.

பின் எப்படியோ எழில், தன்னுடைய காதலை கயலிடம் சொன்னார். ஆனால், கயல் குடும்ப சூழ்நிலைக்காக எழிலை திருமணம் செய்து கொள்ள மறுத்தார். பின்பு ஒரு கட்டத்தில் கயலுக்கு எழில் மீது காதல் ஏற்படுகின்றது. இருந்தாலும், கயல் அதை சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் எழிலுக்கு ஆர்த்தியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால், அந்த திருமணத்தில் எழிலுக்கு விருப்பம் இல்லை. கடைசியில் அந்த திருமணம் நின்றது. ஒரு வழியாக எழிலை காதலிப்பதை கயல் ஒத்துக் கொண்டார்.
கயல் சீரியல்:
கயல்-எழில் காதலிக்க தொடங்கினார்கள். ஆனால், எழிலின் அம்மாவிற்கு கயலை பிடிக்கவில்லை. இருந்தாலுமே எழில், கயலை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார். பின் கயல்- எழில் திருமண வேலைகளும் சிறப்பாக கோலாகலமாக நடந்தது. அப்போது கயலின் அம்மாவிற்கு விஷம் கொடுத்ததால் திருமணம் தடைபட்டது. அதற்கு பின் கயல் உடைய அம்மா குணமாகி வந்துவிட்டார். இருந்தாலுமே கயல்- எழில் இருவரும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கயல்- எழில் திருமணம் :
தற்போது மீண்டும் கயல் – எழில் திருமணத்தின் உடைய ட்ராக் தான் சென்று கொண்டிருக்கின்றது. இந்த திருமணத்தை நிறுத்த பல சதி வேலைகள் நடக்கிறது. எப்படியாவது கயலை பழிவாங்க வேண்டும் என்று கௌதம் காத்துக் கொண்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் திருமணத்தை நிறுத்த கயல் பெரியப்பா, பெரியம்மா போராடுகிறார்கள். இவர்களுடன் புது வில்லியாக தீபிகா சேர்ந்து இருக்கிறார். தீபிகா, தனக்கு எதிராக செய்த சதி வேலைகளை அறிந்து கயல் அவரை மண்டபத்தை விட்டு அனுப்பி விட்டார் .

நேற்று எபிசோட்:
பின் பொது சபையில் தன் பெரியப்பாவை பற்றி பெருமையாக பேசி கயல் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இதை பார்த்து மனம் மாறி பெரியப்பா கயலை மன்னித்து ஆசீர்வாதம் செய்கிறார். இன்னொரு பக்கம் ராஜேஸ்வரி செய்த சதி வேலையால் கயல் அண்ணன் மூர்த்தியை கத்தியால் குத்தி விடுகிறார்கள். இருந்தும் தன் தங்கை திருமணத்திற்காக அனைத்தும் மறைத்து மூர்த்தி மண்டபத்திற்கு வந்து விடுகிறார். ஒரு வழியாக எல்லா ப்ரச்சனை முடிந்து எழில், கயல் கழுத்தில் தாலி கட்டும் போது தீபிகா என்ட்ரி கொடுத்து கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறார்.
https://www.youtube.com/watch?v=6djONVBbh7M
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசொட்டில், தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு எழில் தான் காரணம். அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீபிகா சொன்னவுடன் மண்டபத்தில் உள்ள எல்லோருமே அதிர்ச்சி ஆகிறார்கள். ஆனால், கயலுக்கு இது உண்மை இல்லை என்று தெரியும். இருந்தாலும் எதில் மீது இருக்கும் கலங்கத்தை போக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்குப்பின் தீபிகா செய்த வேலையை ஆதாரத்துடன் நிரூபிக்கிறார். இருந்துமே தீபிகா தற்கொலை செய்ய முயற்சி செய்கிறார். இன்னொரு பக்கம் தேங்காயில் பாம் வைத்து கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறார்கள். இந்த தடைகள் எல்லாம் தாண்டி கயல்- எழில் திருமணம் நடக்குமா? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.






