மேடையில் கண் கலங்கி அழுத்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.!

0
465
keerthi Pandiyan

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அருண் பாண்டியனுக்கு கவிதா, கீரனா, கீர்த்தி என்ற மூன்று மகள்களும் இருக்கின்றனர். தற்போது சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறார் அவருடைய மகள். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’படத்தில் கதாநாயகனாக நடித்த தர்ஷன் நடிக்கும் தும்பா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் நடிகை கீர்த்தி பாண்டியன்.

Related image

 

நடிகர் தர்ஷன் தற்போது ‘தும்பா’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஹரிஷ் ராம் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படம் குழந்தைகளை கவரும் வகையில் வைல்ட்  அட்வஞ்சர் படமாக உருவாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

மேலும், இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிவ கார்த்திகேயன் ‘ஹம்டி டம்டி ‘ என்ற பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் வீடியோ பாடல் ஒன்று வெளியானது. மேலும், இந்த படம் வரும் ஜூன் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

Image result for thumbaa

இந்த விழாவில் பேசிய அவர், சில படங்களின் நடிக்க வந்த வாய்ப்பை நானே தவிர்த்துள்ளேன்.  அதோடு என்னையும் சில இயக்குனர்கள் நிராகரித்துள்ளனர். அதற்கு காரணம் ஒல்லியான தோற்றம் மற்றும், நிறம் என்றும் கூறலாம். ஆனால் தன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தவர் தும்பா பட இயக்குனர் ஹரிஷ்ராம் என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.