வில்லை போல வளைந்து கீகீ கொடுத்த யோகோ போஸ். வியந்து போன ரசிகர்கள்.

0
2517
kiki
- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் மிகப் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் கீர்த்தி சாந்தனு. இவரை அனைவரும் கீகீ என்று தான் செல்லமாக அழைப்பார்கள். இவர் தொகுப்பாளினி மட்டுமில்லாமல் விஜே, நடிகை என்று பன்முகங்கள் கொண்டவர். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் மூலம் தான் தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Quit ur mind…Free ur body! ➿

A post shared by Kiki Vijay? (@kikivijay11) on

பின் இவர் தனது நீண்ட காலம் காதலன் நடிகர் சாந்தனு அவர்களை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கீர்த்தியும், நடிகர் சாந்தனுவும் பல ஆண்டு காலமாக காதலித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். தமிழ் சினிமா உலகில் இயக்குனர், நடிகரான பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இவர்களின் மகன் தான்.

இதையும் பாருங்க : போஸ்டரில் கூட பெண்கள் தான் இதை செய்யணுமா? மாஸ்டர் பட கார்டூன் போஸ்டரில் கடுப்பான மாளவிகா மோகன்.

- Advertisement -

இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார். தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவனாக சாந்தனு நடித்து உள்ளார். மேலும், தற்போது கீர்த்தி அவர்கள் விருது வழங்கும் விழா, டிவி நிகழ்ச்சி என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

View this post on Instagram

Quit ur mind…Free ur body! 〰️

A post shared by Kiki Vijay? (@kikivijay11) on

இந்நிலையில் கீர்த்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் யோகாசனம் செய்வதுமான புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கே பிரமிக்க வைக்கும் அளவில் யோகாசனம் செய்துள்ளார் கீர்த்தி. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதால் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை என அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக உடற்பயிற்சி செய்வது, புத்தகங்கள் படிப்பது, சமையல் செய்வது போன்ற பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.

Advertisement