விஜய் மற்றும் அஜித்தின் பட்டத்தை மாற்றிய கீர்த்தி சுரேஷ்.! அப்படி என்ன பட்டம் தெரியுமா.!

0
658
Keerthysuresh

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றனர். நடிகர் , நடிகைகள் பேட்டியில் பங்கு பெற்றால் அவர்களிடம் விஜய் மற்றும் அஜித் பற்றிய கேள்விகள் இடம்பெறாமல் இருக்காது. அந்த வகையில் கீர்த்தி சுரேஷிடமும் இவர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

Image result for keerthi suresh vijay

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவூட் வரை சென்றுள்ளார். இவர், விஜய்யுடன் பைரவா, சர்கார் என்று இரு படத்தில் நடித்துள்ளார். மேலும், சூர்யா, விக்ரம், விஷால் என்று பலருடன் நடித்து விட்டார். ஆனால், அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு இன்னும் வரவில்லை.

- Advertisement -

தல அஜீத், தளபதி விஜய் என்று இருவருக்கும் பட்டப்பெயர் வைத்து கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். இருவருக்கும், நீங்கள் என்ன பட்டப் பெயர் வைப்பீர்கள் என்று கீர்த்தி சுரேஷிடம் நடிகை குஷ்பு நிகழ்ச்சி ஒன்றில் கேட்டார். அதற்கு பதில் அளித்த கீர்த்தி, அஜீத் ரொமான்டிக் ஹீரோ, விஜய்-டான்ஸிங் ஹீரோ, சூர்யா சென்டிமென்ட் ஹீரோ என்று பதில் அளித்தார்.

Related image

இந்நிலையில் அஜீத்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில்  நடிக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் தளபதியா? தலையா? என்று கேட்டபோது தளபதியா… மணிரத்னம் இயக்கிய தளபதி தானே… என்று பதில் அளித்தார். ஸ்ரத்தாவின் பதிலை கேட்டு டென்ஷன் ஆன விஜய் ரசிகர்கள்,’என்னதான் அஜீத் படத்தில் நடித்தாலும் தளபதி யார் என்று கூடவா தெரியாது’என விமர்சித்து கமென்ட் பகிர்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement