அதே டைலர் அதே வாடகை – 2019ல் சமந்தா செய்தததை தற்போது செய்து பல்ப் வாங்கிய கீர்த்தி சுரேஷ்.

0
381
samantha
- Advertisement -

சமந்தாவின் உடையை போல் கீர்த்தி சுரேஷ் உடை அணிந்து இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள். கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

சமந்தா நடித்த படங்கள்:

இதனால் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும், பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா என்ற படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார்.

சமந்தா நடிக்கும் படங்கள்:

இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் காத்துவாக்குல 2 காதல். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் சமந்தா அவர்கள் திரில்லர் கதை களம் கொண்ட படம், குஷி, ஹாலிவுட் படம், யசோதா போன்று பல படத்தில் சமந்தா நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் சமந்தா நடித்து வரும் சாகுந்தலம் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தை குணசேகர் என்பவர் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

சமந்தா ஆடை குறித்த புகைப்படம்:

இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இப்படி சமந்தா படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருந்தாலும் அடிக்கடி படு கிளாமரான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தியும் வருகிறார். அதுவும் வித்தியாச வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோ சூட் நடத்தி வருகிறார்.

கீர்த்தி சுரேஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்:

அந்த வகையில் சமந்தா 2019 ஆம் ஆண்டு நடத்திய போட்டோ ஷூட் ஒன்றில் அவர் அணிந்தி ஆடை போலவே தற்போது கீர்த்தி சுரேஷ் அணிந்து போட்டோ சூட் நடித்திருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அதே டைலரிடம் அதே வாடகையா! என்று கீர்த்தி சுரேஷை கலாய்த்து வருகிறார்கள். தற்போது கீர்த்தி சுரேஷ் நெட்டிசன்கள் கலாய்த்து வரும் மீம்ஸ் தான் சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது.

Advertisement