கீர்த்தி சுரேஷுக்கு இப்படி ஒரு திறமையா. தளபதிக்கு எப்படி வாழ்த்து தெரிவித்துள்ளார் பாருங்க.

0
3173
keerthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அவர்களின் 46-வது பிறந்தநாளை இன்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். நேற்று முதல் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் விஜய் தான் ட்ரெண்ட் டிங்கில் உள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று விஜய் தனது ரசிகர்களுக்கு கட்டளையிட்டதால் சமூகவலைதளங்களில் ஸ்பெஷலான போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் தீவிர ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்கள் பலரும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் விஜய் பிறந்தநாளுக்கு திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான வீடியோவுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தளபதி விஜய்யுடன் பைரவா, சர்கார் ஆகிய இரண்டு படங்களில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த வீடியோவில் விஜய்யின் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு வயலின் வாசித்து அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் “லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா அல்வேஸ் பி ஹாப்பி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சார். உங்கள் பிறந்தநாளுக்கு என்னுடைய ஒரு சிறிய வாழ்த்து வீடியோ எனக் குறிப்பிட்டு உள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த வாழ்த்து வீடியோ ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.

ஊரடங்கில் வீட்டில் தங்கியிருக்கும் கீர்த்தி சுரேஷ் வயலின் இசைக்கருவியை முறையாக கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது கீர்த்தி அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கை ரோலில் நடித்து வருகிறார். பின் மணிரத்தனம் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement