தென்னிந்திய சினிமா உலகில் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி எனும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் கீர்த்தி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.
கீர்த்தி சுரேஷ் திரைப்பயணம்:
இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. சுரேஷ்க்கு தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். ராக்கி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் சாணி காயிதம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள்:
தற்போது இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வைகை புயல் வடிவேலு, பஹத் பாசில் போன்ற நடிகர்கள் முக்கியாகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான தயாரிப்பு வேலைகள் நடந்து வருகிறது. மேலும் இப்படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சினிமாவை விட்டேன் சென்று விடுவேன் :
இப்படையிருக்கும் போதுதான் ஒரு பேட்டியில் படவாய்ப்புக்காக படுக்கை அழைக்கும் நிலையாமையை குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது சினிமாவில் தன்னுடன் நடிக்கு சக நடிகைகள் அவர்களுக்கு இருக்கும் பாலியல் தொந்தரவுகள் குறித்து பேசியதாக கூறினார். மேலும் கீர்த்தி சுரேஷ் கூறுகையில் எனக்கு அதனை போன்ற எந்த விஷியங்களும் ஏற்படவில்லை. அதோடு என்னிடம் அந்த நோக்கில் யாரும் நெருங்கவும் இல்லை என்று கூறினார்.
ஒருவேளை படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதற்கு என்னிடம் தவறான கண்ணோட்டத்தில் நெருங்கினால் நான் அந்த வாய்ப்பை தூக்கியெறிந்து விடுவேன். அதோடு சினிமாவை விட்டே சென்று விடுவேன் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார். தற்போது மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியுடன் “சைரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.