‘பன்னி குட்டியும் நாயும் ஒன்னு தான்னு எல்லாருக்கும் போய் சேரனும்’ – கீரத்தி சுரேஷ் பேச்சுக்கு ரசிகர்களின் Reaction.

0
2942
Keerthysuresh
- Advertisement -

மாமன்னன் படத்தில் உதயநிதி , பன்னியை தூக்கி நடித்தது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறிய பதில் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். நேற்று உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடிங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்றும் அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த படத்தில் அவரது படத்திற்கு பெரிய பலத்தை சேர்க்கவில்லை. படத்தில் வந்த பன்றியை பற்றி கூட பலபேர் பேசுகிறார் ஆனால் கீர்த்தி சுரேஷ் பற்றி யாரும் பேசவில்லை என்று சமூக வலைதளத்தில் கேலி செய்து வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க இந்த படம் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ் மாரி செல்வராஜ் நினைத்த மாதிரியே படம் எடுத்து விட்டார்.

-விளம்பரம்-

அவர் சொல்ல வந்த விஷயத்தை இந்த படத்தின் மூலம் சிறப்பாக சொல்லிவிட்டார். உதயநிதி ஏ ஆர் ரகுமான் வடிவேலு பகத் உட்பட படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி இந்த படம் பல நல்ல விஷயங்களை நடப்பதற்கு தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷிடம் இந்த படத்தின் நாயகன் பன்றியை கையில் பிடித்து இருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்க்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் ‘பன்னிக்குட்டியும் ஒரு நல்ல மிருகம் தானே. அதை தூங்குவதில் எந்த தவறும் கிடையாது. இது எல்லாருக்கும் போய் சேர வேண்டும்’ என்று பதிலளித்திருக்கிறார் பரவ பன்னிக்குட்டியும் நாயும் ஒன்றா அப்போது நீங்கள் உங்கள் வீட்டில் நாய்க்கு பதிலாக நான்கு பணிகளை வாங்கி வளர்க்கணும் என்று கேலி செய்து வருகிறார்கள்’

Advertisement