நேற்று நடைபெற்ற Csk மேட்சை கீர்த்தி சுரேஷுடன் அமர்ந்து விசிலடித்து கொண்டாடிய சிவகார்த்திகேயன் மகள்.

0
750
Keerthy
- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தனது பயணத்தை ஒரு தொகுப்பாளராகவும் ,காமெடியனாகவும் தனது கலை பயணத்தை தொடங்கி தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்து இருக்கிறார். சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படுத்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக கலக்கி வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சிவா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடித்த படம்:

பின் இறுதியாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் பிரின்ஸ். இப்படத்தில் சூரி, சத்யராஜ், பிரேம்ஜி போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தினை சுரேஷ் பிரோடுக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா தயாரிப்பில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வெளியாகிஇருந்தது. பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இந்த படம் பெரும் தோல்வியை தழுவியது. படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் மத்தியில் எதிர்மறை கருத்துக்கள் வெளியாகி இருந்தது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

மேலும், படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வியை தழுவியது. 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் அயலான், மாவீரன், AK24 என பல படங்களில் சிவா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் மாவீரன். இந்த படத்தில் அதிதி சங்கர் நடிக்கிறார். கண்டிப்பாக மாவீரன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே திருமணம் செய்துகொண்டார்.

-விளம்பரம்-

ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு:

இவருக்கு ஆராதனா என்ற மகளும் குகன் என்ற மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் உடன் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தொடங்கி இருக்கிறது. முதலில் சிஎஸ்கே அணி தான் விளையாடியது. இதை \காண சிவகார்த்திகேயன் சென்றிருக்கிறார். அப்போது சிவகார்த்திகேயனுடன் அவருடைய மகள் ஆராதனாவும் சென்றிருக்கிறார்.

வைரலாகும் புகைப்படம்:

அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷும் சிஎஸ்கே அணி விளையாடுவதை பார்க்க வந்திருக்கிறார். பின் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் அமர்ந்து ஆராதனா கிரிக்கெட் விளையாட்டை பார்த்திருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் ஆராதனா கண்ணாடி போட்டுக்கொண்டு ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். இதை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement