சர்கார் படத்திற்கு பின் தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமான முதல் தமிழ் படம்.!

0
1709
keerthi-suresh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை தென்னிந்திய சினிமாவில் பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் இவரை பற்றிய மீம்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர்.

அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் ஓவர் டோஸேஜ் எக்ஸ்பிரஸின் தான்.அதிலும் இவர் தனுசுடன் தொடரி படத்தில் நடித்த பிறகு தான் இவரை பற்றிய மீம்கள் அதிகம் வந்தது. அது போக அம்மணி நடித்த கடைசி இரண்டு படத்திலும் பெயர் சொல்லும்படி கதாபாத்திரம் அமையவில்லை.

இதையும் பாருங்க : நடந்து முடிந்த நாமினேஷன்.! முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்ற நபர்.! 

- Advertisement -

விஷுலுடம் சண்டக்கோழி, விஜயுடன் ‘சர்கார்’ என்று தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியானாலும், இரண்டு படத்திலும் அம்மணியை கலாய்த்து பல மீம்கள் வெளிவர படும் அப்செட் அடைந்தார் கீர்த்தி. ஆனால், இவருக்கு தெம்பூட்டும் விதமாக இவர் நடித்த ‘மகாநதி’ திரைப்படதிற்காக கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது.

இதனால் அம்மணிக்கு பாராட்டு வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் சர்கார் படத்திற்கு பின்னர் கீர்த்தி சுரேஷ் தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் தற்போது கமிட்டாகியிருக்கிறார்.

தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் மூலம், `மேயாத மான்’, `மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது. இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். எமோஷனல் மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில், ஹீரோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.