திருப்பதியில் கீர்த்தி சுரேஷிடம் தமிழில் பேச சொன்ன செய்தியாளர் – பேச மறுத்து அவர் சொன்ன காரணம். கடுப்பான தமிழ் ரசிகர்கள்

0
3312
- Advertisement -

தமிழில் பேச மறுத்த நடிகை கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் வெளுத்து வாங்கி வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி எனும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது.

- Advertisement -

கீர்த்தி சுரேஷ் திரைப்பயணம்:

மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளிவந்த சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள்:

ராக்கி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் சாணி காயிதம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. சமீபத்தில் இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த “தசரா” என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நானி நடித்து இருந்தார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம்:

யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வைகைபுயல் வடிவேலு, பஹத் பாசில் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான தயாரிப்பு வேலைகள் நடந்து வருகிறது.

திருப்பதிக்கு சென்ற கீர்த்தி சுரேஷ்:

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் வெளுத்து வாங்கி வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தன்னுடைய தந்தை சுரேஷ் குமார், தாய் மேனகா, சகோதரி ரேவதி சுரேஷ் ஆகியோருடன் கடந்த வாரம் திருப்பதி சென்று இருக்கிறார். அங்கு அவர் விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்து இருக்கிறார். இதனை எடுத்து கோயிலுக்கு வெளியே கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருக்கிறார்.

திட்டி தீர்க்கும் ரசிகர்கள்:

அதில் அவர், நீண்ட நாட்களுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையானை வழிபடுவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய அக்கா ரேவதி குறும்படம் இயக்கி இருக்கிறார். நானும் தெலுங்கில் போலோ சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறேன் என்று பேசியிருந்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் தமிழில் பேசுங்கள் என்று கேட்டார். உடனே அவர் திருப்பதியில் இருக்கேனே என்று கூறிவிட்டு மீண்டும் தெலுங்கில் பேசி இருக்கிறார். இப்படி தமிழில் பேச சொன்னதற்கு கோபமாக கீர்த்தி சுரேஷ் பதில் அளித்திருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலருமே, திருப்பதி தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. உனக்கு தமிழில் பேச அவ்வளவு கஷ்டமா என்றெல்லாம் சகட்டுமேனிக்கு திட்டி வருகிறார்கள்.

Advertisement