தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ரிவால்வர் ரீட்டா. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சுனில், சூப்பர் சுப்பராயன், ரெடின் கிங்ஸ்லி, அஜய், ஜான்விஜய், சுரேஷ் சக்கரவர்த்தி, கல்யாண் மாஸ்டர், கதிரவன், அகஸ்டியன், சென்ராயன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் சந்துரு இயக்கியிருக்கிறார். டார்க் காமெடி பாணியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தின் ஆரம்பத்திலேயே பாண்டிச்சேரியில் இரண்டு சம்பவம் நடக்கிறது. கதாநாயகி கீர்த்தி சுரேஷ் அப்பாவை இழந்து தன்னுடைய அம்மா, அக்கா, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய அப்பா 30 வருட உழைப்பில் இரண்டு கோடிக்கு ஒரு லேண்ட் வாங்கி இருந்தார். ஆனால், அது போலி கிரவுண்ட் என்றும் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்றும் தெரிந்ததால் தன்னை தானே சுற்று கொள்கிறார். அந்த சமயத்தில் தான் பாண்டிச்சேரியில் டான் ட்ராகுலா பாண்டியன், ட்ராகுலா பேபி போன்ற ரவுடி கேங்க் ஊரையை மிரட்டி ரவுடிசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அவர்களை எதிர்த்த நரசிம்மா ரெட்டியை கொல்கிறார்கள். இதனால் நரசிம்மா ரெட்டி தம்பி டிராகுலா பாண்டியனை கொல்ல ஸ்கெட்ச் போடுகிறார். அந்த வேலை கல்யாண மாஸ்டருக்கு வருகிறது. அவரை ஒரு வீட்டிற்கு வரவைத்து கொல்ல திட்டம் போடுகிறார்கள். டிராகுலா பாண்டியன் தவறுதலாக கீர்த்தி சுரேஷ் வீட்டிற்கு வருகிறார். அப்போது டிராகுலா பாண்டியனை, கீர்த்தி சுரேஷின் அம்மா ராதிகா தாக்க
அவர் கீழே விழுந்து இறந்து விடுகிறார்.

பின் ட்ராகுலா பாண்டியனுடைய உடலை கீர்த்தி சுரேஷ் குடும்பமே மறைக்க முயல்கிறது. பின் போலீஸ் விசாரணை எல்லாம் நடக்கிறது. கடைசியில் கீர்த்தி சுரேஷ் குடும்பம் அதிலிருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் படம் முழுக்க வந்திருக்கிறார். இவர் ஹீரோ போல் படம் முழுக்க மாஸ் காட்டிருக்கிறார். தனக்கு வரும் அத்தனை பிரச்சனைகளையும் சூப்பராக டீல் செய்து முடிவுக்கு கொண்டு தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
இவரை அடுத்து வரும் ராதிகா அனுபவ நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே தங்களுக்கு கொடுத்தத வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். காமெடி,
ஆக்சன் எல்லாம் பட்டையை கிளப்பி இருக்கிறது. குறிப்பாக தலைப்புக்கு ஏற்ப படம் முழுக்க ஆக்சன் இல்லாமல் இறுதியில் மட்டும் ஆக்ஷன் காட்சிகள் வந்திருப்பது நன்றாக இருக்கிறது.
இரண்டு ரவுடி குரூப்புகளுக்கிடையே ஹீரோயின் மாட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பிப்பதை கொஞ்சம் வித்தியாசமான டார்க் காமெடி பாணியில் இயக்குனர் கொண்டு செல்வது பாராட்டுக்குரிய விஷயம்.
இருந்தாலும் படத்தில் கொஞ்சம் ஆங்காங்கே காமெடி மிஸ் ஆகிறது. டெக்னிக்கலாக படம் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் இருக்கிறது.

நிறை:
கீர்த்தி சுரேஷ், ராதிகா நடிப்பு நன்றாக இருக்கிறது
ஒளிப்பதிவு பின்னணி இசை நன்றாக இருக்கிறது
டார்க் காமெடி படம்
கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது
கதைக்களம் ஓகே
குறை:
கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சில இடங்களில் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை
மொத்தத்தில் ரிவால்வர் ரீட்டா - டார்க் காமெடி






