கிளைமாக்ஸ்ல 200 பேர அடிக்கிறாரு – லியோ படத்தை வச்சி செய்த கீர்த்தி சுரேஷின் தந்தை

0
216
- Advertisement -

விஜய்யை கிண்டலடித்து கீர்த்தி சுரேஷின் தந்தை பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் விஜய். இவர் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது கோலிவுட்டின் நம்பிக்கை தூணாக விஜய் இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் சில பாதங்களாகவே விஜய் குறித்து விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ அவர்கள் நடிகர் விஜய் குறித்து மோசமாக விமர்சித்து பேசி இருந்தார். இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். இவர் பேட்டி ஒன்றில் பீஸ்ட் படத்தை கேலியாக பேசி இருந்தார். இதற்கு காரணம், இவருக்கு சரியான கதாபாத்திரம் கிடைக்காததனால் தான் இப்படி பேசுகிறார் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

விஜய் குறித்த விமர்சனம்:

பின் இவர், விஜய் என்ன மம்முட்டி, மோகன்லால் விட சிறந்த நடிகரா? அவருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் அவர் சிறந்த நடிகராக மாறிவிடுவாரா? பைபிள் விட ஆல்கஹால் அதிகமாக விற்பனை ஆகிறது. அதற்காக ஆல்கஹால் சிறந்தது ஆகிவிடுமா? என்று மோசமாக பேசி இருக்கிறார். இதற்கு விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தந்தை நிகழ்ச்சி ஒன்றில் விஜய் குறித்து கூறியது, லியோ படம் எனக்கு பிடிக்கவில்லை.

கீர்த்தி சுரேஷ் தந்தை வீடியோ:

எப்படி ஒரு ஆள் 200 பேரை கிளைமாக்ஸில் அடிக்கிறாரோ தெரியவில்லை. இதெல்லாம் சூப்பர் ஹீரோ படங்கள் போல தான் இருக்கிறது. சாமானிய மக்கள் இந்த படங்களுடன் கனெக்ட் செய்ய முடியாது என்று விமர்சித்து பேசி இருக்கிறார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் கொந்தளித்து அவரை திட்டி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல், உங்க பொண்ணு சாணிகாகிதம் படத்தில் செய்த ஃபைட் சீனை நீங்க பார்க்கலையா? மலையாள சினிமாவில் படங்கள் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்ற வயிற்றில் தான் இப்படி பேசுகிறீர்கள்.

-விளம்பரம்-

ரசிகர்கள் கொந்தளிப்பு:

பைரவா படம் வரும்போது எல்லாம் இப்படி எதுவும் சொல்லலையே? ஏன் சார்? என்றெல்லாம் கலாய்த்து வருகிறார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் விஜய் உடன் இணைந்து பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக விஜயின் நடிப்பில் வெளிவந்த படம் லியோ. இந்த படத்தை லோகேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன், சஞ்சய் தட், சாண்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

தளபதி 68 படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தில் உடைய வெற்றி விழா நடைபெற்றது. தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement