தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கென் கருணாஸ். இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ் மகன் பிரபலமான இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான அழகு குட்டி செல்லம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது தனுஷ் அவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் தான். இந்த படத்தில் கருணாஸின் மகன் கென் நடிப்பை பார்த்து பல பேர் பாராட்டினார்கள். இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருந்த விடுதலை 2 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கென் நடித்திருந்தார்.

இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் நடித்திருந்தார். பாராட்டப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து வாத்தி என்ற படத்திலும் கென் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். இதற்கிடையில் இவர் மக்களின் சில படங்களில் உதவி இயக்குனராகம் பணியாற்றி இருக்கிறார். தற்போது இவர் யூத் என்ற படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.
கென் கருணாஸ் குறித்த தகவல்:
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதோடு இந்த படத்தின் மூலம் பல அறிமுக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சினிமாவில் அறிமுகமாக இருப்பதால் பலருக்குமே இந்த படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக சோசியல் மீடியாவில் கென் கருணாஸ் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், சினிமா மீது நான் காதல் கொண்ட நாள் முதல் மற்ற அனைத்தும் மெல்ல மெல்ல இரண்டாம் பட்சமாகிவிட்டது.

கென் கருணாஸ் பதிவு:
அது வெறும் பார்வையாக மட்டும் இல்லை. என்னுடைய வாழ்க்கையில் ஒன்றாகவும் மாறிவிட்டது. எனக்கு இப்போது 24 வயது. ஆனால் குழந்தை பருவத்தில் இருந்து இன்று வரை என் உடன் தங்கி இருந்த ஒரே விஷயம் சினிமா தான். எந்த ஒரு சூழலிலும் நான் சினிமாவை கைவிடவில்லை. யூத் படத்தில் இனி வேலை செய்ய முடியாது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இவ்வளவு நாட்கள் அது என் சொந்த குழந்தை போலவே இருந்தது. இத்தனை நாட்களாக தூங்கும் வரை அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஹீரோவாக அழகான ஒரு கதையில் வாழ்ந்தேன்.
View this post on Instagram
படம் பற்றி சொன்னது:
ஒரு இயக்குனராக என்னுடைய சொந்த பாதையை கண்டடைந்தேன். ஒவ்வொரு பிரேமும் என் மனதுக்கு ரொம்பவே நெருக்கமாக இருந்திருக்கிறது. எப்போதுமே நான், ஏன் சினிமா துறைக்கு வந்தேன் என்பதை இந்த படம் நினைவூட்டி கொண்டிருந்தது. இந்த படத்தை உங்களை மனதில் வைத்து தான் உருவாக்கினேன். நீங்கள் எங்கு புன்னகைப்பீர்கள்? எங்கு, எப்படி உணர்வீர்கள் என எப்போதுமே யோசித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய யூத் உங்களுடையதாக மாறுகிறது. அதை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நான் அதனை நேசித்ததை விட நீங்கள் அதிகமாக நேசியுங்கள் என்று கூறியிருக்கிறார்.






