தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் யோகி பாபு நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கெணத்த காணோம். இந்த படத்தை சுரேஷ் சங்கையா இயக்கியிருக்கிறார். இந்த படத்தை ரமேஷ்பாபு தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு, லவ்லின், ரேச்சல், ஜார்ஜ் மரியான் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஹீரோ யோகி பாபு கிராமத்து அம்மன் கோயிலில் பூசாரி ஆக இருக்கிறார். இவர் வசித்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் கோடாங்கி பட்டி கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக இருக்கிறது. இதனால் அந்த ஊரில் பெண் கொடுக்க எல்லோரும் பயப்படுகிறார்கள். யோகி பாபுவுக்கு வயதாகிக்கொண்டே போகிறது. பின் இவர் ஹீரோயின் லவ்லினை காதலிக்கிறார். ஆனால், ஹீரோயின் அப்பா தண்ணீர் இல்லாத ஊரில் பெண் தரமுடியாது என்கிறார்.
இதனால் யோகி பாபுவிற்கு திருமணம் நடக்காமலே போகிறது. பிறகு ஊரில் யோகி பாபுவின் வீட்டில் தண்ணீர் இருப்பதாக நீரோட்டம் பார்ப்பவர் சொல்லி விடுகிறார். இதனால் யோகி பாபு தனக்கு திருமணம் நடக்கவும், ஊர் மக்களுக்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய வீட்டு நிலத்தில் கிணறு வெட்ட அனுமதி கொடுக்கிறார். அந்த கிணற்றில் தண்ணீர் வருவதற்கு முன்பு வேறு ஒரு பிரச்சனை வருகிறது.

அது என்ன? யோகி பாபுவின் கிணற்றில் தண்ணீர் வந்ததா? யோகி பாபுவிற்கு திருமணம் நடந்ததா?
என்பது தான் படத்தின் உடைய மீதி கதை. படத்தில் ஹீரோ யோகி பாபு தனக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார். நக்கல் நையாண்டி கவுண்டர் எல்லாமே கலக்கி இருக்கிறார். எமோஷன் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் என்று சொல்லலாம். இவர் அடுத்து கதாநாயகியாக வரும் லவ்லின் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.
சில காட்சிகளில் அவருடைய நடிப்பு பாராட்டக் கூடிய வகையில் இருக்கிறது. படத்திற்கு பெரிய பலமே கிராமத்தின் உடைய நேட்டிவிட்டி தான். நடிகர்கள் எல்லோருமே கிராம மக்கள் ஆகவே வாழ்ந்து இருக்கிறார்கள். தண்ணீர் பிரச்சனையில் போராடும் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. நீரோட்டம் பார்க்க ஊர் மக்கள் செய்யும் அட்ராசிட்டி எல்லாம் சிறப்பாக இருக்கிறது. முதல் பாதி காமெடியாக இருக்கிறது.

இரண்டாம் பாதி தான் கதையை விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால், அதையும் கொஞ்சம் காமெடியாக இயக்குனர் சொல்லி இருப்பது தான் கொஞ்சம் நெருடல். மக்களினுடைய வலியை இன்னும் அழுத்தமாகவும்
விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறார். அதில் கொஞ்சம் காமெடியை புகுத்திருப்பது தான் கடுப்பை ஏற்று இருக்கிறது. டெக்னிக்கிலாக படம் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை ஒளிப்பதிவு எல்லாமே நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் கெணத்த காணோம் ஒரு சுமாரான படம்.
நிறை:
யோகி பாபு, லவ்லின் நடிப்பு
நடிகர்கள் தங்கள் கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கதைக்களம் ஓகே
டெக்னிக்கலாக படம் நன்றாக இருக்கிறது
முதல் பாதி காமெடி ஓகே
குறை:
படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை காமெடியாகவே செல்கிறது
அழுத்தமான காட்சிகளை இன்னும் கொஞ்சம் சீரியசாக கொடுத்திருக்கலாம்
படத்தை கொஞ்சம் சீக்கிரமாக முடித்து இருக்கிறார்கள்
சிறப்பான மெசேஜை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
மொத்தத்தில் கெணத்த காணோம் - மக்கள் போராட்டம்






