இந்த ஒரு காரணத்தால் தான் விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம்..! பிரபல மலையாள நடிகர் பேச்சு

0
289
Vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய்க்கு தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் படங்கள் தமிழ் மொழியில் வெளியாவது போலவே மற்ற மொழிகளிலும் வெளியாகி வருகிறது.

lal

தமிழ் நாட்டிற்கு அடுத்தபடியாக நடிகர் விஜய்க்கு கேரளாவில் தான் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். அதனால் கேரள மக்களுக்கும் விஜய்க்கும் எப்போதும் இணைபிரியா ஒரு பந்தம் இருந்து வருகிறார். சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு பகுதிக்கு இளைய தளபதி விஜய் என்றும் பெயர் வைத்திருந்தனர் கேரள பகுதி மக்கள்.

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு எதனால் கேரளாவில் இவ்வளவு ரசிகர்கள் இருகின்றனர் என்பதை மலையாள நடிகர் லால் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசிய போது , விஜய் படம் என்றாலே டான்ஸ், சண்டை என எல்லாம் சரியான அளவோடு இருக்கும். சும்மா எந்த படமும் வெற்றியடைந்துவிட முடியாது. அவருடைய படங்களில் ரசிகர்களை ஈர்க்கும் எதோ ஒரு விஷயம் இருக்கிறது.

actor vijay

அதுமட்டுமல்லாமல் மலையாள படங்கள் என்றால் விருது கிடைக்கும் ஆனால் ரசிகர்கள் அவ்வளவாக விரும்பி பார்க்க மாட்டார்கள். தமிழ் படங்களை போல கொஞ்சம் கமெர்ஷியலாக மசாலா கலந்து கொடுத்தால் தான் அதனை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். அதனால் தான் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார் நடிகர் லால்.