அப்பா அம்மாவை காப்பாற்றுங்கள்..! கண்ணீர் விட்டு கதறும் பிரபல நடிகர்

0
709
Munna
- Advertisement -

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் அன்றாட நிலை கடுமையாக பாதிக்கப்ட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தில் மூழ்கியும், மண் சரிவில் சிக்கியும் 324 நபர்களுக்கும் மேற்பட்டோர் உயிரந்துள்ளனர்.மேலும் பல்வேறு மக்களும் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மக்களை போன்றே கேரள நடிகர் நடிகைகளும் மழை வெள்ளத்தில் சிக்கி பாதிப்படைந்துள்ளனர். சமீபத்தில் மலையாள நடிகர் பிரிதிவிராஜ் வீடும் மழை வெள்ளத்தால் மூழ்கிவிட்டது. இருப்பினும் அவரும் அவரது குடம்பத்தினரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்நிலையில் மலையாள நடிகர் முன்னா சைமன், கேரளாவில் மழை வெள்ளத்தால் சிக்கியுள்ள தனது பெற்றோர்களுக்கு உதவுமாறு உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.மலையாள நடிகரான முன்னா சைமன் நடிகர் பரத் நடித்த ‘கண்டேன் காதலை ‘ என்ற படத்தில் தம்மன்னவின் முதல் காதலராக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகர் முன்னா சைமன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘என்னுடைய அப்பா அம்மா வசிக்கும் இடத்தில் மழை நீரின் அளவு அதிகமாகி கொண்டே இருக்கிறது. தற்போது அவர்கள் திருச்சூரில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் இருக்கிறார்கள். அவர்களுடன் 2500 நபர்களும் இருக்கின்றனர். அங்கு உணவு, குடி தண்ணீர், மின்சாரம் போன்று எதுவும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

நான் பல்வேறு நபரை தொடர்பு கொண்டு அங்கு உள்ளவர்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டேன். ஆனால், இன்னும் யாரும் அங்கு சென்றடையவில்லை. விரைவில் அங்கு ராணுவமோ, மீட்புக் குழுவோ சென்றால் தான் அவர்களுக்கு உதவி கிடைக்கும். இன்று என் அப்பாவுடைய பிறந்தநாள், நான் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு வேலை உணவாவது அனுப்புகிறேன், அப்பா!’ என்று கண்ணீர்மல்க அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Advertisement