கேரள வெள்ளத்திற்கு விஜய் என்ன செய்தார்..?

0
953
vijay

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி ஆரம்பித்த மழை, விடாமல் பல நாள்கள் பெய்ததால், மத்திய – வட கேரளப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகிறது. அணைகள் அனைத்தும் நிரம்பியதால், 22 அணைகள் திறக்கப்பட்டன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.

Kerala Flood

- Advertisement -

கடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுக் கொள்ளளவை எட்டிய இடுக்கி அணை திறக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி இன்று(ஆகஸ்ட் 16) காலை நிலவரப்படி 11 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 70 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரைப்பட கலைஞர்கள் எவ்வளவு நிதி அளித்துள்ளார்கள் என்பதை காணலாம்.

* ராம் சரண் – 60 லட்சம்

-விளம்பரம்-

* கமலஹாசன் – 25 லட்சம்

* மோகன்லால்- ரூ. 25 லட்சம்

* விஜய் சேதுபதி – 25 லட்சம்

* அல்லு அர்ஜுன்- ரூ. 25 லட்சம்

* மம்முட்டி, துல்கர் சல்மான்- ரூ. 25 லட்சம்

* சூர்யா, கார்த்தி- ரூ. 25 லட்சம்

* தனுஷ் – 10 லட்சம்

* விஷால்- ரூ. 10 லட்சம்

* சிவகார்த்திகேயன்- ரூ. 10 லட்சம்

* விஜய் தேவரகொண்டா- ரூ. 5 லட்சம்

* அனுபமா பரமேஸ்வரன்- ரூ. 1 லட்சம்

flood

பல்வேறு நடிகர்களும் அவர்களால் முடிந்த தொகையை கேரளா வெல்ல நிவாரணத்துக்கு அளித்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் அவர்கள் நிதி அளித்தாரா இல்லையா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.

பொதுவாகவே, நடிகர் விஜய் அவர்கள் செய்த உதவிகளை விளம்பரமாக வெளிப்படுத்தி காட்டமாட்டார். எனவே, அவர் தற்போது வெள்ள நிவாரண நிதி அளித்திருந்தாலும் அதனை வெளிப்படையாக தெரிவிக்க மாட்டார் . சமீபத்தில் நீட் தேர்வால் இறந்த அனிதா மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் இரவில் சென்று தனது ஆறுதலை தெரிவித்தார்.

vijay actor

இவ்வாறு விளம்பரங்களை விரும்பாத விஜய் கொடுத்தாரா இல்லையா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, விஜய் செய்ய வேண்டியதை அவருடைய ரசிகர்கள் தங்களது நற்பணி மன்றங்கள் மூலமாக நிதி உதவியாகவும், கேரளாவிற்கு நேரிலே சென்று களத்தில் இறங்கி உடலஉழைப்பின் மூலமாகவும் தங்களது உதவியினை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

ஒரு நடிகரின் ரசிகராக பால் அபிஷேகம் செய்வது, போஸ்டர் ஒட்டுவது போன்ற செயல்களை தவிர்த்து விஜய் ரசிகர்கள் இப்போது கேரளா வெள்ள நிவாரண பணிகளில் முழுமையாக ஈடுபட்டுவருகின்றனர். இச்செயல் மக்களிடையே வரவேற்பினையும், பாராட்டுகளையும் பெட்ற வண்ணம் உள்ளது.

Advertisement