18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.! ஜெயராம் உருக்கமான வீடியோ

0
202
Jayaram

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி ஆரம்பித்த மழை, விடாமல் பல நாள்கள் பெய்ததால், மத்திய -வட கேரளப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகிறது.26 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுக் கொள்ளளவை எட்டிய இடுக்கி அணை திறக்கப்பட்டது. தொடர்ந்து பொழிந்து வரும் கன மழையின் வெள்ள பெருக்காலும், மண் சரிவாலும் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.ஆயிரன கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

Posted by Jayaram on Sunday, August 19, 2018

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர். கேரளாவில் ஏற்பட்டுள்ள கன மழை காரணமாக பிரபல நடிகர்கள் அனன்யா, பிரிதிவிராஜ் வீடும் மழை வெள்ளத்தால் மூழ்கி இருந்தது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் ஜெய்ராம் மழை பெருக்கால் ஏற்பட்ட மண் சரிவால் பல மணி நேரம் பாதிக்கப்பட்டதாக ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் ஜெயராம் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘கேரள மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பேரிடரில் சிக்கிய குடும்பங்களில் என் குடும்பமும் ஒன்று. நாங்கள் சென்னையிலிருந்து கார் மூலம் எனது குடும்பத்தினருடன் கேரளாவுக்கு வந்து கொண்டிருந்த வழியில் குதிரன் என்ற இடத்தில் 10, 20 வாகனங்களுக்கு பின்னால் தான் எங்களது வாகனம் நின்றிருந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக் கொண்டோம்.

சுமார் 18 மணி நேரத்திற்கும் மேல் நிலச்சரிவில் சிக்கித்தவித்த நேரம் மிகவும் கொடுமையானது. பெரும் அவஸ்தைக்கு மத்தியில் போலீசார் எங்களை மீட்டு மூன்று நாட்கள் அவர்களது குடியிருப்பில் எங்களை தங்க வைத்தனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி கூறு கடமைப்படுகிறேன் .மேலும், பல பேர் தங்களது உயிருக்காக போராடி வரும் நிலையில் அவர்களுடன் தானும் ஒரு நபராக இருபத்தில் மகழ்ச்சி” என்று நெகிழ்ச்சியுடன் அந்த வீடியோ பதிவில் கூறுயுள்ளார்.