கெட்டிமேளம் சீரியலை விட்டு சிபு சூர்யன் விலகியதற்கான காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் சிபு சூர்யன். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடாவிலும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் நாடகங்களில் முறையாக சேர்ந்து கற்று கொண்டார். பின் இவர் 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் தான் நடிக்க ஆரம்பித்தார்.

அதற்கு பிறகு தமிழில் சன் டிவியில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ரோஜா சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வெற்றி அடைந்தது.
அதனை தொடர்ந்து இவர் சந்திரலேகா, லட்சுமி ஸ்டோர்ஸ், பூவே உனக்காக, அன்பே வா, கண்ணான கண்ணே போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இதை அடுத்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கெட்டிமேளம் என்ற தொடரில் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த சீரியலில் நடிகர் பொன்வண்ணன், பிரவீனா, சாயா சிங் உட்பட பலர் நடிக்கிறார்கள்.
கெட்டிமேளம் சீரியல்:
இந்த சீரியல் ஒளிபரப்பான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் கடந்த சில தினங்களாக இந்த தொடரில் இருந்து ஹீரோ வெற்றி கதாபாத்திரத்தில் நடித்த சிபு சூர்யன் விலகி இருக்கும் தகவல் தான் வைரலாகி இருக்கிறது. சீரியல் விறுவிறுப்பாக செல்லும் நேரத்தில் சிபு வெளியேறியது பலருக்குமே பேரதிர்ச்சி தான். ஆனால், இவர் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இன்னும் சில தினங்களில் இவருக்கு பதில் வேறொருவர் வெற்றியின் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்படுவார்கள்.

சிபு சூர்யன் விலகல்:
மேலும், இவருக்கு பதில் இந்த தொடரில் யாரடி நீ மோகினி, வானத்தைப்போல போன்ற தொடர்களில் நடித்த ஸ்ரீகுமார் தான் நடிகர் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சிபு சூர்யன் சீரியலில் இருந்து வெளியேறியதற்கான காரணம் தொடர்பாக சீரியலுக்கு தொடர்புடையவர்கள் அளித்த பேட்டியில், சீரியல் ஹீரோயின் சாயாசிங் உடன் தான் சிபு சூரியனுக்கு ஏதோ பிரச்சனை என்று யூனிட்டில் பேசிக் கொண்டார்கள். அந்த பிரச்சனை தயாரிப்பு தரப்பு மற்றும் சேனலுக்கு வந்தது.

விலகலுக்கு காரணம்:
அதை தொடர்ந்து சிபுவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை கமிட் செய்ய முடிவுக்கு வந்திருப்பதாக தயாரிப்பு தரப்பு சொன்னார்கள். அதோடு இந்த மாதிரி இவர் சர்ச்சைகளில் சிக்குவது புதிது இல்லை. ரோஜா சீரியல் ஹிட்டாக போய்க்கொண்டிருக்கும் போது சிபு விலகுவதாக சொன்னார். அதோடு நடிகர் சங்கத்தையும் நக்கலாக பேசி இருந்தாராம் என்று கூறியிருக்கிறார்கள். இதை அடுத்து இந்த சர்ச்சை தொடர்பாக சாயா சிங் அளித்த பேட்டியில், நான் வேறொரு சூட்டிங்கில் இருக்கிறேன். கெட்டிமேளம் தொடரில் ஹீரோ சேஞ்ச் ஆகும் விஷயம் நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது. அதனால் விசாரித்துவிட்டு பிறகு பேசுகிறேன் என்று கூறியிருந்தார்.






