Kgf 3 குறித்த சர்ப்ரைஸ் அறிவிப்பு – அட இவரே சொல்லிட்டாரே அப்போ கண்டிப்பா இருக்கும். (அப்போ ராக்கி சாகலையா சார் )

0
599
kgf
- Advertisement -

கே ஜி எப்- 3 படத்திற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ள அறிவிப்பு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎப் 2 படம் வெளியாகியுள்ளது. படத்தில் கருடனை’
கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவங்குகிறார் யாஷ் . ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

- Advertisement -

கே ஜி எஃப் 2 கதை:

படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் யாஷ் தனி ஒருவனாக படத்தை தாங்கி சென்றிருக்கிறார். மாஸ் ஹீரோவாக எல்லோர் மனதிலும் நிற்கிறார். படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளனர். இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள்,

Kgf

கேஜிஎப் 2 படம் பற்றிய தகவல்:

பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் 2 படம் ஒரு சிறந்த விருந்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம். மேலும், இந்தப்படத்தில் எடிட்டராக பணி புரிந்தவர் 19 வயது இளைஞன் உஜ்வல் குல்கர்னி. இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து படம் பார்த்தவர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் பாராட்டி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கேஜிஎப் 2 படத்தின் வசூல்:

அதுமட்டும் இல்லாமல் தமிழ் படங்களுக்கு இணையாக தமிழ் ரசிகர்கள் கேஜிஎப் படத்தை கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் வட இந்தியாவிலும் கே ஜி எஃப் 2 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுடைய முழு ஆதரவையும் கொடுத்து வருகின்றனர். மேலும், முதல் நாளிலேயே கேஜிஎப் 2 படம் 130 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதுவரை கே ஜி எஃப் 2 படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் கேஜிஎப் 2 படத்தின் இறுதி காட்சியில் மூன்றாம் பாகம் வரவிருக்கும் என்று காண்பிக்கப்பட்டு இருந்தது.

KGF 3 Release Date, Cast, Storyline, Trailer, Premiere Date and More!

கேஜிஎப் 3 பட அறிவிப்பு:

இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் கேஜிஎஃப் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா கன்னட சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, கேஜிஎஃப் 2 படம் மாபெரும் வெற்றி அடைந்து வருகிறது. தற்போது கேஜிஎப் 3 படத்திற்கான முதல்கட்ட வேலையை தொடங்கி விட்டோம். விரைவில் அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் கே ஜி எப் 2 டிரைலர் வெளியீட்டு விழாவின்போது இயக்குனர் பிரசாந்த் நீல் கேஜிஎப் படத்தின் அடுத்த பாகம் குறித்து கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement