கேஜிஎப் நடிகருக்கு கேன்சர், பணமில்லாமல் தவிப்பு – திரையுலகினர் உதவ கோரிக்கை – உதவி செய்வாரா யாஷ் ?

0
467
kgf
- Advertisement -

கே ஜி எஃப் பட நடிகர் கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎப் 2 படம் வெளியாகி இருந்தது. படத்தில் கருடனை கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவக்குகிறார் யாஷ் . ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர்.

- Advertisement -

கே ஜி எஃப் 2 கதை:

இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் யாஷ் தனி ஒருவனாக படத்தை தாங்கி சென்றிருக்கிறார். இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார். விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர்.

கேஜிஎப் 2 படம் பற்றிய தகவல்:

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் 2 படம் ஒரு சிறந்த விருந்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம். அதேபோல் வட இந்தியாவிலும் கே ஜி எப் 2 படம் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்து இருந்தது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுடைய முழு ஆதரவையும் கொடுத்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் கேஜிஎப் 2 படத்தின் இறுதி காட்சியில் மூன்றாம் பாகம் வரவிருக்கும் என்று காண்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

-விளம்பரம்-

ஹரிஷ் ராய் குறித்த தகவல்:

இந்நிலையில் கேஜிஎப் பட நடிகர் கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவஸ்தைப்படும் தகவல் வைரல் ஆகி வருகிறது. கே ஜி எஃப் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாச்சா. இவருடைய உண்மையான பெயர் ஹரிஷ் ராய். இவர் சாண்டல்வுட்டில் நடிக்க ஆரம்பித்தவர். தற்போது மூன்று சதாப்தங்களாக கன்னட திரை உலகில் நடித்துக் கொண்டிருக்கிறார். மிகப் பிரபலமான நடிகராக கொடிகட்டி பறந்தவர். கேஜிஎப் படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப் பெற்றிருந்தது.

கேன்சரால் பாதிக்கப்பட்ட ஹரிஷ் ராய்:

இப்படி புகழ் பெற்ற நடிகர் கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருக்கிறார். இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து திரையுலகினர் பலரும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் ஹரிஷ் ராய் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், தனக்கு தைராய்டு புற்று நோய் பாதிக்கப்பட்டு வாழ்க்கைக்கும் சாவுக்கும் இடையே போராடி வருவதாகவும், சிகிச்சைக்காக பணம் இல்லாமல் இப்போது தவிர்க்க முடியாத சூழலில் இருப்பதாகவும் கூறி இருந்தார். இவருடைய நிலைமையை அறிந்து கன்னட நடிகர்கள் உதவி செய்வார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹரிஷ் ராய்க்கு உதவ +91 96069-60656 என்ற எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பணி மாற்றம் செய்யலாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

Advertisement