பல கோடி மதிப்பிலான புகையிலை உற்பத்தி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று யாஷ் மறுத்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவர் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் மூலம் இவர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இது ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு இருந்தது. மேலும், முதல் பாகம் இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் ஸ்ரீநிதி சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து இருக்கிறார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
கேஜிஎப் 2 படம் :
மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருந்த கேஜிஎப் 2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் பீஸ்ட் படத்தை ஓரங்கட்டி கே ஜி எஃப் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அதோடு இந்திய அளவில் ஒரே படத்தின் மூலம் பேன் இந்தியா ஸ்டாராக யாஷ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பல கோடி மதிப்பிலான புகையிலை விளம்பரத்தில் யாஷ் நடிக்க மறுத்து உள்ள தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாகவே பல விளம்பர கம்பெனிகள் நடிகர் நடிகைகளை வைத்து தங்களுடைய பொருள்களை விற்பனை செய்கிறார்கள்.

Exceed Entertainment தலைவர் அருண் பானர்ஜி அளித்த பேட்டி:
அதிலும் சமீப காலமாக மது விற்பனையில் நடிகைகள் இறங்கி இருக்கிறார்கள். சமீபத்தில் கூட நடிகர் அக்ஷய் குமார் அவர்கள் பான் மசாலா நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. பின் அக்ஷய் குமார் அந்த நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது நடிகர் யாஷ் புகையிலை உற்பத்தி பொருட்கள் தொடர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்து இருக்கிறார். இதை உறுதி செய்யும் விதமாக மீடியா ஏஜென்சியான Exceed Entertainment தலைவர் அருண் பானர்ஜி இடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பது,
புகையிலை விளம்பரத்தில் யாஷ் நடிக்க மறுத்த காரணம்:
பான் மசாலா போன்ற பொருட்கள் மக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. இது உயிருக்கே ஆபத்தாக முடியும். தனிப்பட்ட அளவில் பெரிய லாபம் இருந்தாலும் இந்த விளம்பரத்தில் நடிக்க யாஷ் மறுத்து இருக்கிறார். காரணம், அவரின் ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களை நினைத்து தான் இந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்தார். இவர் தான் உண்மையான ஹீரோ. இந்திய அளவிலான இவரின் இமேஜை பயன்படுத்தி சரியான விஷயத்தை சொல்வதற்கான வாய்ப்பாக பார்க்கிறோம். எங்களுடைய நேரத்தையும் வியர்வையும் சரியான பிராண்டுகளுக்கு செலவழிப்பதே பொருத்தமாக இருக்கும். அப்போது தான் நீண்ட நாட்களுக்கு பயணம் செய்ய முடியும்.

புகையிலை விளம்பரத்தில் விலகிய அக்சய்குமார்:
சமீபத்தில்கூட அக்சய்குமார், தான் நடித்த விமல் பான் மசாலா நிறுவன விளம்பரத்தில் இருந்து விலகியிருந்தார். அஜய்தேவ் கான், ஷாருக் கானுடன் இணைந்து புகையிலை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் அக்சய்குமார் நடித்து இருந்தார். புகையிலைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என அரசின் சார்பில் விளம்பரம் செய்து வந்த அக்ஷய் குமாரே அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்தது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சைக்குள்ளானது. இதற்காக மன்னிப்பு கேட்டு அக்சய்குமார் அதீத கவனத்துடன் அடுத்தடுத்து திட்டங்களை தேர்ந்தெடுப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார்.





