Kgf 2 படத்தில் பட்ஜெட், கலக்க்ஷன், நடிகர்களின் சம்பள விவரம் – (நம்ம டாப் ஹீரோ நடிகர்கள் சம்பளத்த வச்சி படத்தையே எடுத்து முடிச்சி இருக்காங்க )

0
1553
kgf
- Advertisement -

கேஜிஎப் 2 பட நடிகர்களின் சம்பளம் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் தான் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

-விளம்பரம்-
Kgf-2

பல எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎப் 2 படம் வெளியாகியுள்ளது. படத்தில் கருடனை கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை தொடங்குகிறார் யாஷ் . ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. பின் கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று எதிரிகள் பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. கே ஜி எஃப் 2 கதை: படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் யாஷ் தனி ஒருவனாக படத்தை தாங்கி சென்றிருக்கிறார்.

- Advertisement -

கேஜிஎப் 2 படம் பற்றிய தகவல்:

மாஸ் ஹீரோவாக எல்லோர் மனதிலும் நிற்கிறார். இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் 2 படம் ஒரு சிறந்த விருந்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

K.G.F. Chapter 2 Release Date Announced Yash Sanjay Dutt Starrer To Release  On April 14 2022

கேஜிஎப் 2 படத்தின் வசூல்:

அதுமட்டும் இல்லாமல் தமிழ் படங்களுக்கு இணையாக தமிழ் ரசிகர்கள் கேஜிஎப் படத்தை கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் வட இந்தியாவிலும் கே ஜி எப் 2 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுடைய முழு ஆதரவையும் கொடுத்து வருகின்றனர். மேலும், முதல் நாளிலேயே கேஜிஎப் 2 படம் 130 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதுவரை கே ஜி எஃப் 2 படம் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தை முந்தி வெற்றி அடைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

நடிகர்களின் சம்பளப் பட்டியல்:

இந்நிலையில் கேஜிஎப் 2 படத்தின் நடிகர்களின் சம்பளப் பட்டியல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

சஞ்சய் தத்:

படத்தில் அதிரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் இந்த படத்திற்காக 9-10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

யாஷ்:

படத்தின் கதாநாயகன், ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் யாஷ் நடித்திருக்கிறார். இவர் இந்த படத்திற்காக 20-25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார்.

ரவீனா டண்டன்:

இவர் இந்த படத்தில் PM ரமிகா சென் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இவர் இந்த படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார்.

ஸ்ரீநிதி செட்டி:

இவர் இந்த படத்தில் கதாநாயகியாக, ரீனா என்ற கதாப்பாத்திரத்தில் ராக்கி பாய் காதலியாக நடித்திருக்கிறார். இவர் இந்த படத்தில் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார்.

பிரகாஷ்ராஜ்:

இவர் இந்த படத்தில் விஜயேந்தர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார்.

மாளவிகா அவினாஷ்:

இவர் இந்த படத்தில் தீபா ஹெக்டே என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் இந்த படத்திற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார்.

ராவ் ரமேஷ்:

இவர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் இந்த படத்திற்காக 80 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

அர்ச்சனா ஜோஸ்:

இவர் ராக்கி பாய் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் இந்த படத்திற்காக 30 லட்சம் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

ஆகவே, இந்தப் படம் மொத்தமே 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இதுவரை 700 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், தமிழ் சினிமாவில் நடிக்கும் ஹீரோக்களின் சம்பளம் மட்டும் 100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement