அட, சாந்தாம்மா நீங்க சன் டிவி சீரியல்ல நடிச்சி இருக்கீங்களா – தமிழ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராக்கியின் அம்மா.

0
559
archana
- Advertisement -

கேஜிஎப் 2 படத்தில் ராக்கி அம்மாவாக நடித்த நடிகை தமிழில் சீரியலில் நடித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவர் கன்னடத்தில் பல படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் தான் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சஞ்சய் தத், மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன், ராவ் ரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎப் 2 படம் இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தில் கருடனை கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை தொடங்குகிறார் யாஷ் .

- Advertisement -

கே ஜி எஃப் 2 கதை:

ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. பின் கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று எதிரிகள் பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. மேலும், படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் யாஷ் தனி ஒருவனாக படத்தை தாங்கி சென்றிருக்கிறார். மாஸ் ஹீரோவாக எல்லோர் மனதிலும் நிற்கிறார். இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார்.

கேஜிஎப் 2 படம் பற்றிய தகவல்:

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் 2 படம் ஒரு சிறந்த விருந்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் தமிழ் படங்களுக்கு இணையாக தமிழ் ரசிகர்கள் கேஜிஎப் படத்தை கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் வட இந்தியாவிலும் கே ஜி எப் 2 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும், முதல் நாளிலேயே கேஜிஎப் 2 படம் 130 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

-விளம்பரம்-

ராக்கியின் அம்மா அர்ச்சனா:

இதுவரை கே ஜி எஃப் 2 படம் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் கேஜிஎப் 2 படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தை முந்தி வெற்றி அடைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேஜிஎப் 2 படத்தில் ராக்கி அம்மாவாக நடித்த நடிகை குறித்த ஒரு ஸ்பெஷலான தகவல் வெளியாகியுள்ளது. கேஜிஎப் 2 படத்தில் ராக்கியின் அம்மாவாக அர்ச்சனா நடித்திருக்கிறார். இவர் கன்னட சினிமாவில் தான் அதிகம் பணிபுரிந்து இருக்கிறார். இவர் கதக் நடன கலைஞர் ஆவார். அதோடு இவர் நிறைய தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து உள்ளார்.

நடிகை அர்ச்சனா குறித்த தகவல்:

இந்நிலையில் இவர் தமிழிலும் ஒரு சீரியல் நடித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருந்த தொடர் சுப்புலட்சுமி. இந்த தொடரில் தான் அர்ச்சனா நடித்துள்ளார். ஆனால், இந்த சீரியல் ஏதோ சில காரணங்களால் அப்படியே டிராப் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு இவர் எந்த ஒரு தமிழ் சீரியலிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஸ்ரேயாஸ் உடுப்பா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். தற்போது இவர்களின் புகைப்படம் ரசிகர்களிடம் அதிகமாக வைரலாகி வருகிறது.

Advertisement