கே ஜி எஃப் 2 திரைப்படத்தில் ராக்கி பாய் கதாபாத்திரம் ஒருவரின் வாழ்க்கை கதையில் இருந்து எடுக்கப்பட்ட உண்மை சம்பவம் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான படம் தான் கேஜிஎப். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் தான் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார்.
இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார். பல எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎப் 2 படம் வெளியாகியுள்ளது. படத்தில் கருடனை கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை தொடங்குகிறார் யாஷ். ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. பின் கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று எதிரிகள் பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர்.
கே ஜி எஃப் 2 கதை:
இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மாசாக இருக்கிறது. கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் 2 படம் ஒரு சிறந்த விருந்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.
கேஜிஎப் 2 படம் பற்றிய தகவல்:
இதுவரை கே ஜி எஃப் 2 படம் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தை முந்தி வெற்றி அடைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பேன் இந்தியா ஸ்டாராக யாஷ் ஜொலித்து கொண்டிருக்கிறார். தற்போது இந்த படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடி வரும் நிலையில் படம் குறித்து புதிய ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதுஎன்னவென்றால், இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படம் என்று கூறப்படுகிறது.
கேஜிஎப் படம் உண்மை கதையா:
அதாவது பிரபல சந்தன கடத்தல் வீரப்பன் போல் கர்நாடகாவில் தங்கம் என்பவர் வாழ்ந்து கொண்டிருந்தார். இவருடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் தான் கேஜிஎப் என்று தங்கத்தின் அம்மா பவுலி தற்போது கூறியுள்ளார். இது குறித்து தங்கத்தின் அம்மா கூறியிருப்பது, என் மகன் தங்கம் கோலார் தங்க சுரங்கத்தில் தொழிலாளியாக வேலை செய்தார். அங்கு ஒரு கும்பலை உருவாக்கி கொண்டு சுரங்கங்களில் இருந்து தங்கத்தை கொள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டார். மேலும், தான் கொள்ளையடித்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவினார். மொத்த கர்நாடக போலீஸாருக்கு இது பெரிய சவாலாக இருந்தது.
கேஜிஎப் படக்குழு அளித்த பதில்:
அதோடு தங்கத்தின் மீது 42 வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசாரால் தங்கம் 1997 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். என் மகனின் கதையை என் அனுமதி இல்லாமல் எடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் என் மகனை கெட்டவனாக சித்தரித்து இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறியதை குறித்து படக்குழுவிடம் விசாரித்த போது படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் இல்லை என்று மறுத்திருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.