தனது மகளின் பெயரை க்யூட்டான வீடியோ மூலம் அறிவித்த KGF யாஷ்.!

0
1442
Yash-Daughter
- Advertisement -

கன்னடத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘கே ஜி எப்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. கன்னட சினிமா துறையின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் யாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான படங்களில் ஒன்றுதான் கே.ஜி.எஃப்.

-விளம்பரம்-

கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்துள்ள இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகியுள்ளது. கன்னடம் ,தமிழ் மொழியில் நேரடியாக வெளியாகியது. 

இதையும் பாருங்க : நமீதா போன்ற ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தத்தை முடித்த வேதாளம் பட வில்லன்.! 

- Advertisement -

யாஷ் கடந்த ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது கே ஜி எப் திரைப்படம் தான். யாஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு ராதிகா பண்டித் என்ற நடிகையை திருமணம் செய்த்துக்கொண்டார்.

இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால் யாஷ்சை விட அவரது மனைவி இரண்டு வயது மூத்தவர். இவர்கள் இருகிவருக்கும் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அதே சமயத்தில் தான் யாஷ் நடித்த ‘kgf ‘ படமும் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

குழந்தை பிறந்து பல மாதங்கள் ஆன நிலையில் தனது மகளின் புகைப்படத்தை வெளியிடாத யாஷ் முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தனது மகளுக்கு ஆர்யா யாஷ் என்று பெயர் வைத்துள்ளார் யாஷ். இதனை ஒரு அழகிய வீடியோ மூலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் யாஷ்.

Advertisement